உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.2.5 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்: இலங்கையில் 5 பேர் கைது

ரூ.2.5 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்: இலங்கையில் 5 பேர் கைது

ராமநாதபுரம்: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட வலி நிவாரணியாக பயன்படும் போதை மாத்திரைகளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்.இலங்கை கடற்படையினர் கல்பிட்டி பகுதியில் உள்ள வெல்லமுண்டலம் கடற்கரைப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஐந்து பைபர் படகுகளில் ஏற்றி வந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்த தமிழகத்தில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.மாத்திரைகளையும், மூன்று பைபர் படகுகளையும் பறிமுதல் செய்த கடற்படையினர், கல்பிட்டி, மோத்துவாரம், குரக்கன்ேஹன, வன்னிமுண்டலம், சின்னக்குடுரிப்பு பகுதிகளை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.இவர்களை புத்தளம் கலால் துறை சிறப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.2.5 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Thravisham
ஜூலை 17, 2025 07:08

திருட்டு த்ரவிஷன்கள் ஆட்சியில் தமிழகம் இன்னொரு தென்னமெரிக்க நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு கண் மூடி மௌனியாக இந்த அரசாங்கத்தை பார்த்துக் கொண்டிருப்பது நல்லதற்கல்ல. இது ஒரு மோசமான முன்னுதாரணம் ஆகி விடக் கூடாது. தமிழகம் வெகு விரைவில் ஓர் எத்தியோப்பியாவாக மாறி விடுமோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை