உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ.எஸ்.ஐ., திட்டத்தில் 5 கோடி பேர் பயன் : மதுரை உதவி இயக்குனர் தகவல்

இ.எஸ்.ஐ., திட்டத்தில் 5 கோடி பேர் பயன் : மதுரை உதவி இயக்குனர் தகவல்

சிவகாசி: ''இ.எஸ்.ஐ., திட்டத்தில், தமிழகத்தில் 1.35 கோடி தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த 5 கோடி பேர் பயன் பெறுகின்றனர்'' என, மதுரை உதவி இயக்குனர் விஜயன் கூறினார் . சிவகாசியில் நடந்த இ.எஸ்.ஐ., வைரவிழா கொண்டாட்டம் மற்றும் அதன் திட்டங்கள் பற்றிய விளக்க கருத்தரங்கில் அவர் பேசியதாவது: சிவகாசி இ.எஸ்.ஐ., மூலம், பயனாளிகளுக்கு மாதம் 7 லட்ச ரூபாய் பணப்பயன் வழங்கப்படுகிறது. மதுரையில், 3.5 லட்ச ரூபாய் வினியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில், 1.35 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களது குடும்பத்தினர், 5 கோடி பேர் பயன்பெறுகின்றனர். மதுரை மண்டலத்தில், 3 லட்சம் தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 15 லட்சம் பேரும் பயன்பெறுகின்றனர். மகப்பேறு உதவி பெறுவது, மாநில அளவில் சிவகாசியில் தான் அதிகம். இ.எஸ்.ஐ.,யில் தொழிலாளர்கள் எளிமையாகப் பயன்பெற வகை செய்யப்பட்டுள்ளது. முன்பு, 70 ரூபாய் சம்பளம் பெறும் தொழிலாளி இ.எஸ்.ஐ., கட்ட வேண்டாம் என இருந்தது. தற்போது, 100 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.தொழிலாளி விபத்தில் இறந்தால், அவரது குடும்பத்தில் ஆண் 25 , பெண்கள் 23 வயது வரை பயன்பெறலாம். 55 வயதில் ஓய்வு பெற்ற தொழிலாளி, 120 ரூபாய் செலுத்தி அவரும், அவரது மனைவியும் மருத்துவ சிகிச்சை பெறலாம். அவர் விருப்ப ஓய்வில் சென்றாலும், பயன்பெற அனுமதிக்கப்படும், என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ