உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அக்டோபர் 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை

அக்டோபர் 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை

சென்னை: 'மாநகராட்சிகளில் வசிப்போர், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம்' என, நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1oi15avd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், பிரதான வரி வருவாயாக சொத்து வரி உள்ளது. சென்னை மாநகராட்சியில் ஆண்டுக்கு 1,800 கோடி ரூபாய்; இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், 100 முதல் 1,000 கோடி ரூபாய் வரை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.சொத்து வரியை பொறுத்தவரையில், இரண்டு அரையாண்டுகளில் வசூலிக்கப்படுகிறது. முதல் அரையாண்டு ஏப்., 1 முதல் செப்., 30 வரை. இரண்டாம் அரையாண்டு அக்., 1 முதல் மார்ச் 31 வரை. இதில், அரையாண்டு துவங்கும் முதல் 30 நாளில் சொத்து வரி செலுத்துவோருக்கு, 5 சதவீதம் அதிகபட்சம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இது குறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் வரும் 2025 - 26ம் நிதியாண்டு முதல், 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட உள்ளது. எனவே, முறைப்படி சொத்து வரி செலுத்துவோருக்கு, அரசு சலுகைகள் வழங்கி வருகிறது. இந்த இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை, வரும் 30க்குள் செலுத்தினால், 5 சதவீதம் அல்லது 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை கிடைக்கும். அவ்வாறு செலுத்தாதவர்களுக்கு, 1 சதவீதம் தனி வட்டி என்ற அடிப்படையில், தண்ட வரி வசூலிக்கப்படும். எனவே, நகர்ப்புற உள்ளாட்சிகளில் வசிப்போர், வரும் 30க்குள் சொத்து வரி செலுத்தி பயனடையலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

V GOPALAN
அக் 01, 2024 06:38

டீச்சர்ஸ் சம்பளம் கொடுப்பதற்கு பணம் இல்லை பிச்சைக்கார நாடு தமிழ்நாடு


சிவக்கொழுந்து
அக் 01, 2024 04:55

பரம தத்திகள் அங்கே வேலை செய்யறாங்க. திருச்சிராபள்ளி மாநகராட்சிக்கு வரி ஆன்லைனில் செலுத்தினால் 5 சதவீதம் குறைச்சு கட்டச் சொன்னாங்க. கட்டி முடிச்ச பத்தாம் நாளில் ஒரு தத்தி வீட்டுக்கே வந்து பாக்கி 5 சதவீதத்தைக் கட்டச் சொல்லி நோட்டீஸ் குடுக்குது. அதைக் கட்ட ஆபீஸ் போனா அங்கே அதுக்கும் 5 சதவீதம் கழிச்சு கட்ட சொல்றாங்க. இவனுங்களுக்கு எவன் வேலை குடுத்தான்? எவன் சாஃப்ட் வேர் எழுதிக்குடுத்தான்னு தெரியலை. மாநகராட்சி கமிஷனருக்கு எழுதிப் பாத்துட்டேன். பாவம் அவருக்கு மட்டும் என்ன தெரியப் போகுது? எல்லாம் நம்ம தலைவிதி


Natarajan Ramanathan
அக் 01, 2024 02:48

இது வழக்கமான ஏமாற்றுவேலை. நான் போனமுறை இந்த அறிவிப்பை நம்பி உடனே வரியை செலுத்தினேன். ஆனால் மூன்று சதம் மட்டுமே சலுகை கிடைத்தது. எனவே இப்போது எல்லாம் அப்படி செலுத்துவதில்லை. செப்டம்பர் மற்றும் மார்ச் கடைசி தேதியில்தான் செலுத்துகிறேன்.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 01, 2024 13:22

உண்மை நபண்பரே. கோவையிலும் நான் ஏப்ரல் மாதத்திலேயே ஆண்டு முழுவதற்கும் வரி செலுத்தினேன். கிடைத்தது இரண்டரை சதவீத தள்ளுபடி மட்டுமே. அதுவும் வீட்டு வரிக்கு மட்டும். குடி தண்ணீர் வரி குப்பை வரிகளுக்கு கிடையாதாம். ஆனால் சொன்னது மொத்த வரியில் ஐந்து சதவீதம். இப்படி ஏமாற்றுவதற்கு லிப்ஸ்டிக் மாடலில் இருபது சதவீதம் சலுகை என்று விளம்பரப்படுத்தினால் என்ன?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை