உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயர் மட்ட விசாரணை வேண்டும்: இதிலாவது கேள்வி கேட்கிறார் திருமா!

உயர் மட்ட விசாரணை வேண்டும்: இதிலாவது கேள்வி கேட்கிறார் திருமா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சென்னையில் நடந்த விமான சாகசத்தை பார்க்க வந்தவர்களில் 5 பேர் உயிரிழந்தது குறித்து, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்' என வி.சி.க., தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ' இந்திய விமானப்படை ஒவ்வொரு ஆண்டும் 'விமானப்படை நாளைக்' கடைபிடித்து வருகிறது. தலைநகர் டில்லியில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சி நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு எடுத்த முடிவின் அடிப்படையில், கடந்த ஓரிரு ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் என்னும் இடத்தில் இது நடைபெற்றது. இந்த ஆண்டு தமிழகத்தில் மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை இந்த சாகச நிகழ்வை நடத்தியுள்ளது.

கூட்ட நெரிசல்

இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை விமானப்படையும் தமிழக அரசும் இணைந்து மேற்கொண்டன. இது தொடர்பாக முன்கூட்டியே ஊடகங்களில் வெளியான செய்திகள் பொது மக்களை வெகுவாக ஈர்த்ததால் லட்சக்கணக்கானவர்கள் மெரினா கடற்கரையில் கூடிவிட்டனர். இந்நிலையில் தான், ஐந்து பேர் பலியாகும் அவலம் நடந்துள்ளது.இந்த சாவுகள் கூட்ட நெரிசலால் (stampede) ஏற்படவில்லை. வெயிலின் தீவிரத்தால் உண்டான நீர்ச்சத்து குறைவு காரணமாகவே ஏற்பட்டிருக்கின்றன எனத் தெரிய வருகிறது. தமிழக அரசின் சார்பில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

விசாரணை

எனினும் வெயிலின் கொடுமையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது குறித்து இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். வெயிலின் கொடுமையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா என்பதை விசாரித்து அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உயர்மட்ட விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Narayanan Sa
அக் 08, 2024 20:35

சூரியனை அவர்கள் தான் வைத்து இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்களால் எதுவும் செய்ய திராணி இல்லாமல் இருக்கிறார்கள்


Tamil Inban
அக் 07, 2024 20:06

ஆதவ் அர்ஜுனாவுகிட்ட கட்சியை வித்துட்டு சந்த காச வச்சி கடைசிவரை காலத்தை தள்ளு போற போக்கை பார்த்தா எல்லாரும் உண்ணாநிமிட்டி போய்டுவாங்கபோல


Jysenn
அக் 07, 2024 20:04

பல்லு படாமல்.... பேசுகிறார்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 07, 2024 19:56

போட்டோவைப்பார்த்தா தலையில கொஞ்சமாச்சும் இருக்குதா ன்னு மன்னரை கேட்பது போல இருக்கு ....


Sudha
அக் 07, 2024 19:37

அதாவது என்ன சொல்றர்னா, சூரிய வெப்பத்தை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். லட்ச கணக்கானோர் இந்த மாதிரி உதவாக்கரை நிகழ்ச்சிக்கு வருவதை தடுக்க வேண்டும். கட்சிகள் தெருவடைத்து மாநாடு நடத்தும் போது மட்டும் எந்த கட்டுப்பாடும் தேவையில்லை, இறந்தவர்களுக்கு ஜாதி அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும்


theruvasagan
அக் 07, 2024 17:34

போன அறிக்கையை விட இந்த அறிக்கையில் காரம் கொஞ்சம் குறைவுதான். இருந்தாலும் மாநில அரசு மீது தவறு இருப்பதை அரசல் புரசலாக சொல்லுகிற மாதிரி இருக்கு. அதனால இந்த அறிக்கையை தூக்கி போட்டுட்டு புது அறிக்கையில் ஒன்றிய அரசின் ஓரவஞ்சகத்தால் அன்றைக்கு பார்த்து வெயில் கடுமையாக அடிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவே உயிரிழப்புகளுக்கு காரணம்னு சொல்லும்படி எசமானர்கள் கிட்டயிருந்து தாக்கீது வராலாம். வந்தால் அப்படியே அறிக்கையும் விடுவாப்பல. இளிச்சவாய் டம்ளன் அதையும் கேட்டுப்பான்.


கலைஞர் பிரியன்,திருவாரூர்
அக் 07, 2024 19:17

ஏலே குருமா கூட்டணி திமுக அரசை எதிர்த்து அரசியல் பண்ண உனக்கு எப்படி துணிவு வந்தது இந்த தைரியத்தை யார் உனக்கு கொடுத்தது கூட்டணி தர்மத்தை காப்பாற்ற முடிய வில்லை என்றால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறு மீசையை முறுக்கினால் மட்டும் பத்தாது அத்துமீறாமல் ஒழுங்காக அடங்கி கிடக்க வேண்டும்.


அப்பாவி
அக் 07, 2024 16:54

என்ன உயர்மட்ட க்குழு விசாரணை? தடுக்கி விழுந்தா அடுத்தவன் மேலேதான் விழணும். என்னவோ காணாததைக் கண்ட மாதிரி எல்லாத்துக்கும் முண்டியடிக்கும் மக்கள். அடிப்படை போக்குவரத்து வசதி கூட செய்துதர துப்பில்லாத ஒன்றிய, விடியல் அரசுகள்.


RAMAKRISHNAN NATESAN
அக் 07, 2024 14:18

வைகுண்டர் கருத்து போடல ...... விசிக விடம் மோதவேண்டாம் என்று ஐ டி விங் சொல்லிவிட்டதா ????


RAMAKRISHNAN NATESAN
அக் 07, 2024 14:17

சிறுத்தையார் பதுங்கிப் பதுங்கி பாய்கிறாரே ...... ஆமா .... சரக்கு எதிர்ப்பு மாநாட்டில் சரக்கு உபயம் உங்களுக்கு அபயம் கொடுத்த திமுகதானே ??


ஆரூர் ரங்
அக் 07, 2024 14:10

நிறைய வசதிகள் கொடுக்க இதென்ன துமு கார் ரேஸா ? இன்னும் பேசினா பிளாஸ்டிக் சேர் மரியாதை கூட கிடைக்காது. ஜாக்கிரதை.


முக்கிய வீடியோ