உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றிய 5 பேர் கைது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றிய 5 பேர் கைது

திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக ஹிந்து அமைப்பினர் கோரிக்கை வைத்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் சிலர் தீபத்துாணில் தீபம் ஏற்றினர். இதுகுறித்து, சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்யதது. தீபம் ஏற்றியவர்கள் குறித்து போலீசார் விசாரித்தனர். ஹிந்து முன்னணியை சேர்ந்த அரசுப் பாண்டி, செல்வகுமார், சண்முகவேல், பிரசாந்த், சூர்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
நவ 19, 2024 22:10

தீபம் ஏற்றுவது தவறா?


krishnamurthy
நவ 19, 2024 08:43

இந்துக்களே இனியாவது சொரணை கொள்ளுங்கள் . ஒன்று கூடுங்கள். இம்மாதிரி அயோக்கியத்தனங்களை தடுக்க வேண்டும். நமது உரிமையை விட்டு கொடுக்க கூடாது


sankaranarayanan
நவ 19, 2024 07:36

மலை உச்சியில் கார்த்திகை பொன்னாளில் தீபம் ஏற்றக்கூட அதிகாரம் இல்லையா இது என்ன இந்து நாடா அல்லது ...........


Sathyanarayanan Sathyasekaren
நவ 19, 2024 07:15

புகார் செய்த கோவில் நிர்வாகிகளை சரியாக கவனித்தால் புத்தி வரும்.


Sathyanarayanan Sathyasekaren
நவ 19, 2024 07:10

என்னது கோவில் நிர்வாகமே புகார் கொடுத்ததா? இதை விட வெட்கக்கேடு ஹிந்துக்களுக்கு வேறு என்ன வேண்டும்? திருப்பரங்குன்றத்தில் சொரணையுள்ள ஹிந்துக்கள் ஒரு பத்து பேர்கூட இல்லையா? கைது செய்யும் பொது தடுக்க வக்கில்லையா? இந்த விஷயத்தில் கத்திக்கு "பயந்து" மதம் மாறிய முஸ்லிம்களிடம் இருந்து படம் கற்றுக்கொள்ளவேண்டும், ஒரு பயங்கரவாதியை கைது செய்தால் கூட செய்யவிடாமல் அவர்கள் கூடிவிடுவார்கள், ஹிந்துக்களோ அவர்ளுக்காக போராடும் ஹிந்து முன்னணியினரை கைது செய்தால் வேடிக்கை பார்ப்பார்கள். என்றுதான் சொரணை வருமோ?


சமீபத்திய செய்தி