உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே பைக்கில் 5 பேர் பயணம் அரசு பஸ் மோதி மாணவர் பலி

ஒரே பைக்கில் 5 பேர் பயணம் அரசு பஸ் மோதி மாணவர் பலி

கடலுார்: குறிஞ்சிப்பாடி அருகே 5 பேர் பயணம் செய்த பைக் மீது, அரசு பஸ் மோதியதில் பிளஸ் 2 மாணவர் இறந்தார். காயமடைந்த நான்கு பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த கேசவநாராயணபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மகன் சுனில்ராஜ்,17; குறிஞ்சிப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.நேற்று காலை, அதே ஊரைச் சேர்ந்த மோகன்ராஜ்,31; என்பவருடன் குறிஞ்சிப்பாடிக்கு ஸ்ப்ளண்டர் பைக்கில் சென்றார். பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்த அதே ஊரை சேர்ந்த பிளஸ் 1 மாணவி சாந்தினி, பத்தாம் வகுப்பு மாணவிகள் சந்தியா,15; பவித்ரா,15; ஆகியோரும் அதே பைக்கில் குறிஞ்சிப்பாடிக்கு சென்றனர்.குறிஞ்சிப்பாடி, கஞ்சமநாதன்பேட்டை அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சுனில்ராஜ், சம்பவ இடத்திலேயே இறந்தார்.மோகன்ராஜ், சாந்தினி, சந்தியா, பவித்ரா ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். மோகன்ராஜ், பவித்ரா சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும், சாந்தினி, சந்தியா கடலுார் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

vijai hindu
பிப் 11, 2025 14:29

இவங்க தப்பு செஞ்சுட்டு சாவுறது இல்லாம பஸ் டிரைவர் அவரோட வாழ்க்கையிலும் விளையாடுறாங்க


Minimole P C
பிப் 11, 2025 11:50

Police is the real culprit. They never bother about 1. sound eardeafing horn, 2. continuous horning, 3.wrong side driving with right and royal ego, 4. putting road divider within the city limit, becuase of that every body beliefs that wrong side driving is unavoidable 5. allowing parking vechiles both sides of the median, 6. Least bothered about traffic jam 7. Partiality in dealing with offenders 8. Above all corruption 9. misuse of powers indealing with road side vendors etc. If above 9 things are not there, accidents will be very much minimised.


W W
பிப் 11, 2025 09:55

இவர்களின் அட்வஞ்சர், அவர்களை பழி வாங்கிவிட்டது, இனி பள்ளியில் வாகனங்கள் பற்றியூம் Driving safety Traffic ரூல்ஸ் Fire & Safety Classes should be contacted yearly once to the whole student & Conduct Exam as an Extracurricular activity It should be included in PT session Classes. இதில் சிலர் பயன் அடைய வாய்ப்புள்ளது என்பது என் எளிய கருத்து இதனை ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்றுக்கொள்ளலாம் .


VENKATASUBRAMANIAN
பிப் 11, 2025 08:12

பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டித்து வளர்ப்பதில்லை. சிலர் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றே கண்டுகொள்வதில்லை. அதன் விளைவுதான் இது. அரசு மட்டுமே கன்டரோல் செய்ய முடியாது. பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும்.


Sundaran
பிப் 11, 2025 07:40

சாவட்டும் அராஜகம் கும்பல் அப்பன் கண்டிப்பதில்லை . இவங்கள் சாவதுமில்லாமல் பிறரையும் சாகடிக்கிறான்கள். காவலர்களும் கண்டு கொள்வதில்லை. மகளிரும் ஆண்களுக்கு சமமாக ஒரே பைக்கில் 3 பேர் செல்கின்றனர் . ஓட்டுநர் உரிமமும் கிடையாது. 10 வயதில் கியர் பைக் ஓட்ட பெற்றோர் அனுமதிக்கின்றனர். இதில் பெருமை வேறு . சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை