உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2ம் திருமணத்துக்கு சம்மதம் கூறி பேராசிரியையிடம் 5 சவரன் மோசடி

2ம் திருமணத்துக்கு சம்மதம் கூறி பேராசிரியையிடம் 5 சவரன் மோசடி

சேலம் : கல்லுாரி பேராசிரியையை இரண்டாம் திருமணம் செய்து கொள்வதாக கூறி, 5 சவரன் நகை பறித்த, மோசடி வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் ஜீவிதா, 36; தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி பேராசிரியை. கடந்த, 2012ல் திருமணமாகி, 2015ல் விவாகரத்தானது. இரண்டாவது திருமணம் தொடர்பாக, செயலி வாயிலாக மாப்பிள்ளை தேடி வந்தார். இதில், அறிமுகமான சென்னை, பல்லாவரம், கிருஷ்ணா நகரை சேர்ந்த ரமேஷ், 36, கடந்த, 9ம் தேதி வீட்டுக்கு வந்துள்ளார்.சுங்கத்துறையில் உதவி கமிஷனராக பணிபுரிவதாக கூறி, திருமணம் செய்ய சம்மதித்துள்ளார். நகை செய்வதற்காக, அளவு எடுக்க வேண்டும் எனக்கூறி, அவரிடம் வளையல், டாலர் செயின், மோதிரம் உள்ளிட்ட ஐந்தரை சவரன் நகையை வாங்கி சென்றுள்ளார்.ஆனால், 12ம் தேதிக்கு பின், அவரது மொபைல்போன், 'சுவிட்ச் ஆப்' ஆனது. சென்னை சென்று விசாரித்த போது, ஆசாமி மோசடி செய்தது தெரிந்தது. ஜீவிதா புகாரின்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி