உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 50வது திருமண நாள்: தலைவர்களுக்கு முதல்வர் விருந்து

50வது திருமண நாள்: தலைவர்களுக்கு முதல்வர் விருந்து

சென்னை: முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஆகியோர், இன்று தங்களது 50வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். இதையொட்டி, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்களுக்கு, முதல்வரின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில், நேற்றிரவு சிறப்பு விருந்து அளிக்கப் பட்டது. இதில், வி.சி., தலைவர் திருமாவளவன், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, ம.நீ.ம., தலைவர் கமல், இந்திய கம்யூ., மாநில பொதுச் செயலர் முத்தரசன், மார்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, முதல்வரின் மனைவி துர்கா, துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு ஆகியோர் உடன் இருந்தனர். துணை ஜனாதிபதி தேர்தல் குறித்தும், கூட்டணியை பலப் படுத்துவது குறித்தும், இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

P. SRINIVASAN
ஆக 20, 2025 10:38

வாழ்த்துகள் .. நீங்கள் இருவரும் நீடூடி வாழவேண்டும்


P. SRINIVASAN
ஆக 20, 2025 10:37

வாழ்த்துக்கள் .. நீண்ட ஆயுளுடன் நீங்கள் இருவரும் வாழவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை