நிறுவனங்களுக்கு ரூ.566 கோடி அபராதம்
சென்னை:சென்னை கிண்டியில், பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், 'ஜி.ஐ.ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்' செயல்படுகிறது. இதன் இணை நிறுவனமாக, 'ெஹர்ம்ஸ் ஐ டிக்கெட் பிரைவேட் லிமி டெட்' செயல்படுகிறது.கடந்த ஒரு வாரத்திற்குள், இந்நிறுவனத்தின் ஏராளமான பங்குகள், மொரீஷியஸ் நாட்டில் உள்ள நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன. அங்கிருந்து அப்பங்குகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள, இந்தியர் ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தனியார் நிறுவனங்களுக்கு, 195 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இதையடுத்து, இரு நிறுவனங்களுக்கும், சென்னை அமலாக்கத் துறை அதிகாரிகள், 566.5 கோடி ரூபாய் அபராதம் விதித்தனர்.