உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 59 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள்: ஆய்வில் அம்பலமான முக்கிய தகவல்

தமிழகத்தில் 59 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள்: ஆய்வில் அம்பலமான முக்கிய தகவல்

சென்னை: 'தமிழகத்தில் 59 சதவீதம் எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. நாட்டிலே அதிகபட்சமாக ஆந்திராவில் 79 சதவீதம் எம்.எல்.ஏ.,க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன' என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.நாடு முழுவதும் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 4,123 எம்.எல்.ஏக்களின் பிரமாணப் பத்திரத்தை, ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஆய்வு செய்தது. இதில், நாடு முழுவதும் 45 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.இது தொடர்பான ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 28 மாநிலங்களில் உள்ள 4,123 எம்.எல்.ஏ.,க்களில் 45 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.29 சதவீதம் பேர், அதாவது 1,205 எம்எல்ஏக்கள் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திராவில் (79%) 138 எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதைத் தொடர்ந்து கேரளா மற்றும் தெலுங்கானாவில் தலா 69 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.பீஹாரில் 66%, மஹாராஷ்டிராவில் 65% எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. தமிழகத்தில் 59% எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.கட்சி வாரியாக விபரம் வருமாறு: * பா.ஜ.,வின் 1,653 எம்.எல்.ஏ.,க்களில், 39 சதவீதம் பேர், அதாவது 638 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அவர்களில் 436 பேர்(26 சதவீதம்) கடுமையான குற்றச் சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.* காங்கிரஸ் கட்சியின் 646 எம்.எல்.ஏ., க்களில், 339 பேர் (52 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 194 பேர் (30 சதவீதம்) மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.* தெலுங்கு தேசம் கட்சியின் (TDP) 134 எம்.எல்.ஏ., க்களில், 115 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 82 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.* மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் 230 எம்.எல்.ஏ., க்களில், 95 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 78 பேர் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.* ஆம் ஆத்மி கட்சியின் 123 எம்.எல்.ஏ., க்களில், 69 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 35 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.* சமாஜ்வாதி கட்சியின் 110 எம்.எல்.ஏ., க்களில், 68 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 48 பேர் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.* தமிழகத்தை ஆளும் தி.மு.க., வின் 74 சதவீத (132 இல் 98) எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 42 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Velan Iyengaar, Sydney
மார் 19, 2025 08:21

அப்போ நம்ம சட்ட அமைச்சர்...


முருகன்
மார் 19, 2025 05:56

குற்ற வழக்கு இருந்தால் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் ஆனால் எந்த ஒரு கட்சியும் அதனை செய்யது


Kasimani Baskaran
மார் 19, 2025 04:05

திராவிட கோட்பாடுகளில் முக்கியமானது கேடித்தனம்.. இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 19, 2025 01:20

அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்று சொல்வார்களே ??


ராமகிருஷ்ணன்
மார் 18, 2025 21:52

திமுக ஆட்சியில் குற்றவாளிகள் பெருகுவது ஏன். அந்த குற்றவாளிகள் அடுத்த திமுக அரசியல்வாதிகளாக மாறுகிறார்கள். ஆகையால் அமைச்சர்கள் மேல் கேஸ்கள் இருக்கிறது. பிறகு நீதியை மிரட்டி விலைக்கு வாங்கி யோக்கியன்களாக நடப்பார்கள். தற்போது உள்ள திமுக, அதிமுக அரசியல்வாதிகளின் அடியாட்கள், அல்லக்கைகளை கவனித்து பார்த்தால் 100 சதம் அரசியல் பாதுகாப்பு கருதி உடன் சுற்றுபவர்கள், அதை பயன்படுத்தி கட்டை பஞ்சாயத்து, கமிஷன் என்று காசையும் சம்பாதிக்க முடியும். உலகத்திலேயே மிக மிக கேவலமான அரசியல் திமுக செய்து வருகிறது.


K V Ramadoss
மார் 18, 2025 21:41

வெட்கம் மஹா வெட்கம்.... Politics is the last resort of the scoundrel என்பது எவ்வளவு உண்மையாய் இருக்கிறது. நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் எவ்வளவு SCOUNDREL ஆக இருக்கிறார்கள் என்பதை அறியும்போது மிக வேதனையாய் இருக்கிறது.


B MAADHAVAN
மார் 18, 2025 21:23

வழக்கு நிலுவையில் உள்ளவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்ற சட்டம் இயற்றினால், குற்றம் சாட்டப் பட்டவர்கள் வழக்கை விரைந்து முடிக்க நீதிமன்றத்தை நாடி, தேர்தலுக்கு முன் நிரபராதி பட்டம் பெற முயற்சிப்பார்கள். நீதியரசர்கள் பெரும்பாலோர் அதி முக்கியத்துவம் தரக்கூடிய வழக்கை விட்டு விட்டு, இதுபோன்ற வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழக்கை சாதகமாக முடித்து வைக்க வற்புறுத்தப்படுவார்கள். அப்படியே, அதற்கு முன்தேர்தல் வந்து விட்டாலும், தைரியமாக குற்றம் புரிந்து மாட்டியவர்களுக்கு பதில், குற்றம் புரியக் கூடியவர்கள், குற்ற வழக்கில் புத்திசாலித்தனமாக மாட்டாமல் இருந்தவர்கள் போட்டியிடக் கூடும். காமராஜர், ஓமந்தூரார், கக்கன், ராஜாஜி, முத்துராமலிங்க பெருமானார் போன்ற நற்குணங்கள் உடைய அரசியல்வாதிகள் வரமாட்டர்களா என்ற ஏக்கம் தீர ஆண்டவன் அருள் புரியட்டும்.


Murugesan
மார் 18, 2025 20:50

தமிழகத்தில் 99% உறுப்பினர்கள் ஊழல் பணத்தில வாழுகின்ற அயோக்கியர்கள் தான்.


Ramesh Sargam
மார் 18, 2025 20:33

என்னப்பா நீங்க. வெறும் 59 சதவீதம்தானா? அடுத்தமுறை நூறு சதவீதம் இருக்கணும். இல்லையென்றால் உங்களை கட்சியிலிருந்து வெளியேற்றிவிடுவேன் என்று தமிழக முதல்வர், தானை தலைவர் கட்சி எம்.எல்.ஏக்களை கண்டித்துகொண்டிருக்கிறார்.


Venkateswaran Rajaram
மார் 18, 2025 19:59

MLA க்கு அடிப்படை தகுதியே கிரிமினலா இருக்கணும் ,இதுல என்ன பெரிய ஆச்சரியம் இருக்குதுனு கண்டுபிடிச்சிருக்காங்க


முக்கிய வீடியோ