இந்தாண்டில் இதுவரை 5,946 கண்கள் தானம்
சென்னை: “தமிழகத்தில் இந்தாண்டில் இதுவரை, 5,946 கண்கள் தானமாக பெறப்பட்டு, இந்தியாவிலேயே அதிக கண் தானம் பெறப்பட்ட மாநிலமாக உள்ளோம்,” என, மக்கள் நல்வாழ்வு து றை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், 14 லட்சம் ரூபாய் மதிப்பில் இ ரண்டு 'பேட்டரி' வாகனங்களை , அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். பின், அமைச்சர் அளித்த பேட்டி: தமிழகத்தில், பார்வை இழப்பு தடுப்பு விகிதம் 0.33 சதவீதமாக உள்ளது. ஆனால், தேசிய குறியீடு 0.36 சதவீதம். அதன்படி, தேசிய குறியீட்டை காட்டிலும், தமிழகத்தில் பார்வை இழப்பு குறைந்த அளவே உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கண்புரை பாதிப்பு 82 சதவீதம்; விழி த்திரை பாதிப்பு 5.6 சதவீதம் ; சர்க்கரை நோய் விழித்திரை பாதிப்பு ஒரு சதவீதம்; கண் நீர் அழுத்த பாதிப்பு 1.3 சதவீதம்; மற்றவை 10.1 சதவீதமாக உள்ளது. மே லும், இந்தாண்டில் இதுவரை, 12,167 கண்புரை பரிசோதனைகள் முகாம்கள் நடத்தப் பட்டு, கண்புரை பாதிக்கப்பட்ட, 1.82 லட்சம் பயனாளிகளுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 30 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்தாண்டில் இதுவரை, 5,946 கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக கண் தானம் பெறப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. சென்னை திருவல்லிக்கேணி கஸ்துாரிபா மகப்பேறு மருத்துவமனையில், லஞ்சம் வாங்கிய ஒன்பது பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நான்கு மருத்துவ பணியாளர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். நான்கு செவிலியர்களிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.