உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடுக்கடலில் மாயமான 6 மீனவர்கள்; சக மீனவர்களால் பத்திரமாக மீட்பு

நடுக்கடலில் மாயமான 6 மீனவர்கள்; சக மீனவர்களால் பத்திரமாக மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: நடுக்கடலில் மாயமான மீனவர்கள் 6 பேரும், சர்வதேச எல்லைக்கு அருகே பத்திரமாக மீட்கப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=01v999k4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0துாத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த நவ 21ம் தேதி சதீஷ்குமார், 34, என்பவரது படகில், அவருடன் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், 31, அல்போன்ஸ், 46, ஜூடு, 41, சுதர்சன், 33, ஜார்ஜ், 37, ஆகிய 6 பேர் ஆழ் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள், 26ம் தேதி கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரை திரும்பவில்லை. அவர்கள் ஆறு பேரும் நடுக்கடலில் தத்தளித்து வருவதாக மட்டும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் மூன்று நாட்டுப்படகுகளில் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இன்று (நவ.,01) அவர்கள் 6 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rajkumar Ramamoorthy
டிச 01, 2024 12:56

Fishermen to save themselves in not correct. Is there no government body to help them?


அறிவழகன்,தங்கச்சிமடம்
டிச 01, 2024 13:06

வானிலை ஆய்வு மையம் ஆறு நாளா மீன் பிடிக்க கடலுக்கு போக கூடாதுன்னு கரடியா கத்தியும் இவனுக திமிரெடுத்து கடலுக்கு மீன் பிடிக்க போனா அதுக்கு அரசை என்ன செய்ய முடியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை