உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்புவனம் காவல் நிலைய போலீசார் 6 பேர்... சஸ்பெண்ட்: விசாரணையில் வாலிபர் மரணம் எதிரொலி

திருப்புவனம் காவல் நிலைய போலீசார் 6 பேர்... சஸ்பெண்ட்: விசாரணையில் வாலிபர் மரணம் எதிரொலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நகை திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோவில் தற்காலிக ஊழியர், மரணம் அடைந்த விவகாரத்தில், அவரை தாக்கியதாக போலீசார் ஆறு பேரை சஸ்பெண்ட் செய்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார்.சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஜூன் 27ல், மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி, 76, என்பவர், தன் மகள் டாக்டர் நிகிதாவுடன் தரிசனம் செய்ய வந்தார். சிவகாமியால் நடக்க முடியாத நிலையில், கோவில் தற்காலிக ஊழியர் அஜித்குமார், 29, 'வீல் சேர்' கொண்டு வந்து கொடுத்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bqf9oah4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, காரை பார்க்கிங் செய்யுமாறு சாவியை அஜித்குமாரிடம் நிகிதா கொடுத்துள்ளார். வழிபாடு முடிந்து சிவகாமியும், நிகிதாவும் காருக்கு திரும்பிய போது, கார் இருக்கையில் வைத்திருந்த பையில் 9.5 சவரன் நகையை காணவில்லை.

புகார் அளித்தனர்

இது குறித்து நிகிதா கேட்டதற்கு, அஜித்குமார் முறையான பதில் தராததால், திருப்புவனம் போலீசில் நகை திருட்டு குறித்து புகார் அளித்தார்.போலீசார், அஜித்குமாரை கோவில் அருகே வைத்து விசாரித்தனர். விசாரணைக்கு பின், அஜித்குமார் உடல்நலம் பாதிக்கப்பட்டு, திருப்புவனம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து, போலீசார் அடித்ததால் தான் அஜித்குமார் இறந்தார் எனக்கூறி, அவரது உறவினர்கள் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் முன் நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தையடுத்து, போலீஸ்காரர்கள் கண்ணன், ஆனந்த், பிரபு, சங்கரமணிகண்டன், ராஜா, ராமச்சந்திரன் ஆகிய ஆறு பேரை சஸ்பெண்ட் செய்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பாக திருப்புவனம் மாஜிஸ்திரேட் வெங்கடேஷ் பிரசாத் விசாரிக்கிறார்.இதற்கிடையில், இறந்த அஜித்தின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்; போலீசார் மீது வழக்கு பதிய வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களிடம் எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பேச்சு நடத்தினார். அத்துடன் இச்சம்பவத்தை கண்டித்து, மடப்புரத்தில் நேற்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டமும் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.இதற்கிடையில், உயிரிழந்த அஜித்குமாரின் உடலை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரரை, தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்பையாவின் காரில் அழைத்து செல்ல போலீசார் ஏற்பாடு செய்தனர்.

மறித்தனர்

ஆனால், 'தி.மு.க., வினர் வாகனத்தில் அழைத்து செல்லாமல், போலீஸ் வாகனத்தில் தான் அழைத்து செல்ல வேண்டும்' என அ.தி.மு.க.,வினர் வலியுறுத்தினர். அத்துடன், தி.மு.க.,வினர் வாகனத்தை, அ.தி.மு.க., மாவட்ட செயலர் செந்தில்நாதன் தலைமையில் அக்கட்சியினர் மறித்தனர். மேலும், போராட்டம் நடந்த இடத்தில் கம்யூ., நாம் தமிழர், பா.ஜ., உள்ளிட்ட கட்சியினரும் திரண்டனர்.அரைமணி நேர போராட்டத்திற்கு பின், போலீஸ் வாகனத்தில் அவர்களை அழைத்து சென்றனர். போலீசாரும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தி.மு.க.,வினரை வைத்தே பேச்சு நடத்தினர். இதற்கு, மற்ற கட்சியினரும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பேச்சு நடந்த இடத்திற்கு, தாசில்தார் விஜயகுமாரை அனுமதிக்கவில்லை என புகார் தெரிவித்தனர். திருப்புவனத்தைச் சேர்ந்த கலாம் கார்த்திகேயன் கூறியதாவது: விசாரணை என்ற பெயரில் அஜித்தை, போலீசார் சட்டவிரோதமாக வைத்து அடித்துள்ளனர். தவறு எதுவாக இருந்தாலும் தீர விசாரித்திருந்தால், இது போன்று உயிர் பலி ஏற்பட்டிருக்காது.போலீசாரின் எந்த விசாரணையாக இருந்தாலும், அது மரணத்தில் தான் முடியும் என்பதை அஜித் மரணம் சுட்டிக்காட்டுகிறது. மரணிப்பது இயல்பு என்றாலும், மரணிக்க வைப்பது தான் போலீசாரின் செயல் என, இந்த சம்பவம் மூலம் நமக்கு தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.'போலீசார் கடுமையாக தாக்கியதால் இறந்தார்' இறந்த அஜித்தின் தம்பி நவீன் கூறியதாவது: எங்கள் சிறுவயதிலேயே அப்பா இறந்து விட்டார். அம்மா தான் கஷ்டப்பட்டு வளர்த்தார். ஜூன் 27ல் அஜித்தை விசாரணைக்கு அழைத்து சென்றனர். என்னை, 28ம் தேதி காலை 6:00 மணிக்கு போலீசார் அழைத்து சென்று, தி.புதுார் நான்கு வழிச்சாலை பைபாஸ், வலையனேந்தல் கண்மாய் அருகே வைத்து, சாதாரண உடையில் இருந்த போலீசார் சரமாரியாக தாக்கினர். நகையை எடுக்கவில்லை என்று கூறியும், கேட்காமல் தொடர்ந்து அடித்து துன்புறுத்தினர். பின், என்னை மட்டும் விடுவித்தனர். அஜித்தை மடப்புரம் கோவில் அலுவலக பின்புறம் அழைத்து சென்று, அங்கு வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதன் காரணமாகவே என் அண்ணன் உயிரிழந்தார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

JaiRam
ஜூன் 30, 2025 22:15

மணிப்பூருக்கு பிரதமர் போகவில்லை என்ற 200 ரூவா உ பி பீஸ் இங்கு ஏன் தத்தி வரவில்லை. 2026 தேர்தலில் மீண்டும் இந்த கூட்டத்திற்கு ஒட்டு போடுங்கள் பின் போலீஸிடம் அடிபட்டு சாகுங்கள்


kumar
ஜூன் 30, 2025 21:29

சகோதரர் நவீன்: உங்கள் சகோதரர் அஜீத் குமார் கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் . பொதுவெளியில் மக்களை கொள்ள குண்டு வைக்கும் குடும்பலை சிலிண்டர் எடுத்து சென்றார்கள் என்று அரவணைக்கும் மாடல் அரசில், போதை பொருள் தயாரித்து விநியோகம் செய்பவரை கட்சியில் பெரிய இடத்தில் வைக்கும் அரசுக்கு உங்கள் அண்ணனை போன்ற சிறியவர்களையும் , அரசுக்கு ஆட்சி பிச்சை போடாதவர்களும் அக்கறை இல்லை . அதனால் முதல்வரின் கையில் இருக்கும் போலீசுக்கும் கவலை இல்லை . தமிழ் நாட்டில் திமுக கரை வேட்டிகளை தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பது வேதனை


vijay
ஜூன் 30, 2025 21:03

அது எப்புற ஊடகங்கள் எல்லாம் அமைதியா ஆயிடறிங்க சாத்தான்குளத்துக்கு விடிய விடிய டிவி ல விவாதம் , அமளி துமளி பண்ணிகிட்டுருந்திங்க . இப்போ திமுக ஆட்சியில் லாக் மரணம் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கின்றது ஆனால் வாய தொறக்கம கப் சிப் ன்னு இருக்கிங்க . எங்க ஒளிஞ்சுக்கிட்டு இருக்கிறாங்களோ இந்த நக்கீரன் கோபால் , நடிகர் கூட்டம். சாத்தான்குளம் லாக் உப்பு மரணத்தில் தவறு செய்த காவலர்கள் கைது செய்யப்பட்டனர் , அனல் இங்கே தவறு செய்த காவலர்கள் சஸ்பெண்ட் மட்டுமே செய்துள்ளார்கள் . நல்ல ருக்கு ஒங்க நியாயம் .


Gopalan
ஜூன் 30, 2025 20:56

சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து அவர்களின் குடும்பங்களுக்கு குறைந்த பட்ச உதவி தொகை கொடுக்க வேண்டும். சஸ்பெண்டு செய்யாமல் நிரந்தர பணி நீக்கப்பட்ட வேண்டும்


sridhar
ஜூன் 30, 2025 18:32

சாத்தான்குளம் தந்தை மகன் - 15 நாட்கள் தினமும் அதையே அரைத்த ஊடகங்கள் இன்று கள்ள மௌனம் .


ஆரூர் ரங்
ஜூன் 30, 2025 16:01

அறநிலையத்துறை பணியாளர் படுகொலை.


SUBRAMANIAN P
ஜூன் 30, 2025 14:14

ரவடிகளெல்லாம் காசு குடுத்து போலீஸ் ஆனால் இப்படித்தான் நடக்கும். ஓட்டுபோடுறதுக்கு முன்னாடி யோசிக்கணும்.


P. SRINIVASAN
ஜூன் 30, 2025 12:34

அந்த காவலர்களை தூக்கில் போடவேண்டும்... அவர்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தார்கள்.. இந்த dmk அரசு மிக மிக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். வெறும் சஸ்பெண்ட் பத்தாது.


sivakumar Thappali Krishnamoorthy
ஜூன் 30, 2025 11:19

அது என்ன சாபம் விடுறது செத்ததுக்கு நிதியும் வோட்டுக்கு மானியமும், சரக்கும், பிரியாணியும் குடுத்தா வோட்டு போடுற சமூகம் சாபம் விடுது ...


chidhambaram
ஜூன் 30, 2025 09:57

சாமானியன் சக மனிதனை ஒருவனை அடித்தால் , கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து 10 வருஷம் உள்ள தூக்கி வைக்கலாம் , அதுவே uniform போட்டு சக மனிதனை அடித்தே கொன்றாலும் சஸ்பெண்ட் தான் 50% ஊதியம் , அதிக பட்சம் transfer இல்ல ஆயத்தப்படை .....நம்ம சட்டம் விந்தையானது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை