உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக அரசுக்கு 6 கேள்விகள்; முதல்வருக்கு அண்ணாமலை சவால்

திமுக அரசுக்கு 6 கேள்விகள்; முதல்வருக்கு அண்ணாமலை சவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திமுக அரசுக்கு ஆறு கேள்விகளை தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை எழுப்பி இருக்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fgw28pt3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது அறிக்கை:1. 2023-24ம் ஆண்டு CAG அறிக்கையின்படி, 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 14,808 கோடி ரூபாய் நிதி செலவிடப்படாமல் வீணாக்கியது ஏன்?2. 2023-24ம் ஆண்டு மக்களிடம் வசூலிக்கப்பட்ட மின்சார வரி 1,985 கோடி ரூபாய். இதில், 507 கோடி ரூபாயை TANGEDCO நிறுவனம் ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்தாமல் மடைமாற்றியது ஏன்?3. 2021-22 முதல் 2023-24 வரையிலான 3 ஆண்டுகளில் மத்திய அரசிடம் பெற்ற GST இழப்பீடு தொகையான 28,024 கோடி ரூபாயில் 10 சதவீதம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டும் என்பது மாநில திட்டக்குழுவின் பரிந்துரை. ஆனால் இவை வழங்கப்படவில்லை. ஏன்?4. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதற்காக, 511 வாக்குறுதிகளை கொடுத்தீர்கள். இவையன்றி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி தனியாக தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தது திமுக. இவற்றில் 10 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல் 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா?5. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழகத்தின் கடன் சுமையை குறைப்போம் என்று கூறி, கடந்த 4 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் புதிதாக கடன் வாங்கியது ஏன்?6. தமிழகத்தில், மத்திய அரசின் திட்டங்களில் நடக்கும் ஊழல்களை ஊக்குவிக்கும் விதமாக, திமுக அரசு கள்ள மௌனத்தில் இருப்பது ஏன்?இவற்றிற்கு பதிலளிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு திராணி இருக்கிறதா? அடுத்த முறை நீதிமன்றத்திலோ, மக்கள் மன்றத்திலோ திமுக அசிங்கப்படும்போது, அறுபதாண்டு கால பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வராமல், புதியதாகச் சிந்தித்து வரக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

முதல்வருக்கு பதில்

அதே நேரத்தில், ஜிஎஸ்டி சீர்திருத்தம், சாலை திட்டங்கள், ரயில் திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக, மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் பத்து கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்த பத்து கேள்விகளுக்கு பதில் அளித்து அண்ணாமலை சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டு உள்ளார். முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுப்பி இருந்த 10 கேள்விகளை படிக்க, இங்கே கிளிக் செய்யவும்!https://www.dinamalar.com/news/tamil-nadu-news/cm-stalin-raises-some-questions-union-bjp-government/4060593


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Kasimani Baskaran
அக் 19, 2025 08:48

ஹிந்தி படித்தால் அவர் என்ன சொன்னார் என்பதை கேட்டு தெரிந்து கொள்ள முடியும். இல்லை என்றால் கேள்வி மட்டுமே கேட்க முடியும்.


Rajarajan
அக் 19, 2025 08:07

அரசியலும், நிர்வாகமும், தாமரையும், தண்ணீர்த்துளியும் போல. இரண்டும் ஒட்டாது. அரசியலுக்கு வாக்கு தேவை. வாக்குக்கு இலவசம் தேவை. இலவசத்திருக்கு அரசின் கஜானா தான் மூலதனம். இதற்க்கு மக்களின் வரிசுமை தான் பிரதானம். ஆனால், நிர்வாகத்திருக்கு சிக்கனம் தேவை. ஆட்சிக்கு வருபவர்கள் சிக்கனத்தை பார்த்தால், இலவசம் கிடைக்காது.வாக்கும் கிடைக்காது. இலவசம் கொடுத்தால் சிக்கனம் இருக்காது. தமிழகத்தில் காங்கிரஸ் தோற்று, தி.மு.க. வெற்றிபெற்றதின் அடிப்படை இதுதான். கமலின் கருத்து போல இது குழப்பமாக இருந்தாலும், பொறுமையாக வரிக்கு வரி படித்தால் தெளிவாக புரியும்.


Kasimani Baskaran
அக் 19, 2025 07:28

அண்ணாமலை தனக்கு செய்யப்பட அத்தனை அவமரியாதைகளையும் தாங்கிக் கொண்டு பாஜகவில் பொறுமையாக, நாட்டு நலன் கருதி, செயல்படுவது பாராட்டப்பட வேண்டியது. ஊழல் தீம்க்கா பழைய மாணவர்களை பின்னால் நிறுத்தி அவர்களின் வாரிசுகளை ஊழல் கோட்டைக்குள் அனுப்பி பொய் சொல்ல பயிற்சி கொடுத்துக்கொண்டு இருக்கிறது. இப்பொழுது தீம்க்கா கோட்டைக்குள் ஓட்டை போடுவது எளிது. பழைய மாணவர்களை சந்தியில் நிறுத்தி பல்லாயிரம் கேள்வி கேட்கவேண்டும். குறைந்தபட்சம் டி ஆர் பாலுவின் கோர்ட் நடைமுறைகளை பொது வெளியில் ஊடகங்கள் மூலம் பிரபலப்படுத்த வேண்டும்.


Rajarajan
அக் 19, 2025 07:26

ஒரு பொதுவான, நடைமுறை நிர்வாக அலசலில் பார்ப்போம். இது அரசியல் சார்ந்தது அல்ல. எந்த ஒரு தனியார் நிறுவனமும், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், புது புது தொழில்நுட்பத்தை உட்புகுத்தி, வரவு செலவை ஆராய்ந்து, அதன்படி நடைமுறையை மாற்றி அமைக்கும். இதுதான், அந்த நிறுவனத்தை தொடர்ந்து இயக்க அனுமதிக்கும். இதில் பணியாளர்களின் கல்வி / திறமை / போட்டிபோடும் திறன் / சம்பளம் / சலுகைகள் மற்றும் தேவையான குறைந்த அளவு மனிதவளம் ஆகியவை அடங்கும். நஷ்டத்தில் இயங்கும், தேவையற்ற செலவினங்கள் மற்றும் மனிதவளம் போன்றவை கட்டுப்படுத்தப்படும். முடியவில்லை எனில், நிறுவனத்தை இழுத்து மூடிவிடும். ஆனால், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அவ்வாறு இருக்காது. ஒருவர் குறைந்தபட்ச கல்வி மற்றும் அடிப்படை திறமையுடன் பணியில் சேர்ந்தால், கட்டாயமாக அவருக்கு உயர்பதவி தானே வந்து சேரும். மேற்கொண்டு காலத்திற்கேற்ற கல்வி மற்றும் தகுதி திறன் உயர்த்துவது தேவையே இல்லை. ஆனால், இதற்கான உயர் சம்பளம்/சலுகைகள் / பஞ்சபடி / போனஸ் ஆகியவை உயர்ந்துகொண்டே செல்லும். இதற்கிடையில், இந்த அரசு / பொதுத்துறை நிறுவனம் நடைமுறையில் தொழில்நுட்பம் / நிர்வாகத்தில் வழக்கொழிந்து நஷ்டத்தில் அல்லது தேவையற்று தொடர்ந்து இயங்கும். இதை இயக்கவேண்டிய அவசியமே இருக்காது. ஆனாலும் வலுக்கட்டாயமாக, அரசு தொடர்ந்து மானியம் தந்து இவற்றை இயக்கிக்கொண்டே இருக்கும்.


மணிமுருகன்
அக் 18, 2025 23:02

இவ்வளவு கேள்விக்கும் பதில் வருமா வராது ஏனென்றால் அவ்வளவு பணமும் பங்குபிரிக்கப்பட்டிருக்கும் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி திமுக கூட்டணியால்


சிட்டுக்குருவி
அக் 18, 2025 22:40

தூங்க கூரை,மூன்றுவேளை உணவில்லாத மக்கள் .குடிநீர்வசதி,சாலை,கழிவுநீர் வசதி இல்லாத கிராமங்கள் இருக்கும்போது அப்பனனுக்கு ஊரார் பணத்தில் சமாதியை அலங்கரிப்பது ,ஊரெங்கும் மக்கள் வரிப்பணத்தில் சிலைவைப்பது , தனிவிமானத்தில் வெளிநாடுபயணம் இதெற்கெல்லாம் மனசு கூசவில்லையா ?


pakalavan
அக் 18, 2025 22:08

மோடிக்கான கேள்வி- 15 லட்சம் என்ன ஆச்சு,


Modisha
அக் 19, 2025 05:57

உழைத்து சம்பாதி .


vivek
அக் 19, 2025 06:33

ஓசி சோறு ......


சிட்டுக்குருவி
அக் 18, 2025 21:30

மொத்தத்தில் ஆள தகுதி இல்லாத ஆட்சி .ஐந்து வருடகாலத்தில் சுமார் 6700 கும் மேலான கொலைகள் .பெரும்பாலானவை குடம்பக்கொலைகள் .முதல் வருடத்தில் ஆராய்ந்திருந்தாலே ஏன் குடும்பத்தில் கொலைகள் நடக்கின்றன என்று தெரிந்திருக்கும் சாராயம்தான் காரணம் என்று .மக்கள் எப்படி செத்தால் நமக்கென்ன நம்ம கல்லாப்பெட்டி நிறயவேண்டும் என்பதுதான் ஆளுபவரின் குறிக்கோள் .பாடசாலைகள் இல்லை ,படித்துப்பட்டம் பெறவில்லை .ஆனாலும் ஆளுமை என்றால் என்ன என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னே நம் மூதாதையர் ஆட்சியாளர்களுக்கு மிகவும் தெளிவாக தெரிந்திருந்தது .இரவில் மாறுவேடம் இட்டு மக்கள் அமைதியாக வாழ்கின்றார்களா என்று சோதித்த மன்னர்களைப்பற்றி படித்திருக்கின்றோம் .இந்த நவீன காலத்தில் எல்லா வசதி வாய்ப்புகள் இருந்தபோதிலும் மக்கள் வாழ்க்கை வசதிகள் எப்படி இருக்கின்றது என்று அரசு ஆராய்ந்த்ததுண்டா ? சுமார் ஆயிரத்து ஒருநூறு ஆண்டுகளுக்கும் முன்னே கரிகாலன் கட்டிய கல்லணை கள்ளுக்கணக்காக இன்றும் நிமிர்ந்து நின்று மக்களுக்கு பயனளிக்கும்போது உங்கள் ஆட்சிக்காலத்தில் கட்டிய பள்ளிக்கட்டிடங்கள் இடிந்துவிழுவதும் ,அதனால் மக்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்கருதி தனியார் பள்ளிகளில் சேர்பதினால் அரசுப்பள்ளிகள் மூடப்பட்டது உங்களுக்கு கேவலமாக தெரியவில்லையா ?உங்கள் காலத்தில் போடப்பட்ட சாலைகள் குறிப்பாக கிராம சாலைகள் முழுவதுமாக ஒருவருடம் சேதாரமாகாமல் இருந்து முதல்வருட பிறந்தநாள் கொண்டாடிய சரித்திரம் உள்ளதா ?நீங்கள் அரசியலில் தூய்மையாக வும் லஞ்சலாவண்யமின்றி ஆட்சி சேய்திருந்தால் தங்கள் சொத்துக்களையும் ,தங்களுடன் பணிசெய்தவர்களின் சொத்துக்களையும் தணிக்கைக்கு உட்படுத்த தயாராக உள்ளீர்களா என்பதை தெரியப்படுத்துவீர்களா? பதில் சொல்லுங்கள் .


தமிழ்வேள்
அக் 18, 2025 20:32

தமிழகத்தை மூன்றாக பிரித்து சிதறடித்தால் தவிர திராவிட மாயையை அழித்தல் கடினம் திராவிட மாயையின் மூலம் ஒற்றை தமிழகமும் மொழி வெறியும்... சினிமா, சாராயம், போதைப்பொருள் பயன்பாடு இந்த மாயை விலகாமல் இருக்கும் மூலபலம்.. மாயையை வெல்ல மூல பலம் அழிக்கப்பட வேண்டும்... ஆந்திர தெலங்கானா மாநிலங்கள் போல தமிழகம் இருந்தால் வளர்ச்சி இருக்கும்.. திராவிடம் டீகம்போஸ் ஆகி மறையும்..


திகழ்ஓவியன்
அக் 18, 2025 20:02

திமுக தேர்தல் அரசியலை மட்டும் செய்யும் கட்சியல்ல மக்களுக்கான அரசியலை தொடர்ந்து முன்னெடுக்கும் கட்சி எனவே கூட்டணிகளை பற்றி கவலைப்படாமல் மக்களை நோக்கிய அரசியலை மட்டுமே முன்னோக்கி செல்லவேண்டும்


vivek
அக் 18, 2025 21:06

கேட்ட கேள்விக்கு பதில் இல்லையா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை