உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.6,000 கோடிக்கு பட்டாசு விற்பனை; வியாபாரிகள் ஹேப்பி அண்ணாச்சி

ரூ.6,000 கோடிக்கு பட்டாசு விற்பனை; வியாபாரிகள் ஹேப்பி அண்ணாச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நாடு முழுவதும் ரூ.6,000 கோடிக்கு பட்டாசு விற்பனையாகியுள்ளதாக தமிழக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பட்டாசு விற்பனை கடந்த ஒரு வாரமாக சூடுபிடித்துள்ளது. பொதுமக்களும் ராக்கெட், சரவெடி என பல்வேறு விதமான பட்டாசுகளை வாங்கி வெடித்து வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4vf6i4s4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மழை உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டு பட்டாசு அதிகளவில் தேக்கமடைந்த நிலையில், இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளில் 90 சதவீதம் விற்று தீர்ந்து விட்டதாக தமிழக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது. உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் தமிழகம் உள்பட பிற மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டன. மழை காரணமாக, கடந்த ஆண்டை விட 75 சதவீத பட்டாசுகளே உற்பத்தி செய்யப்பட்டது. நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகியுள்ளன, எனக் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ram
அக் 31, 2024 20:38

சாராயம் காச்சும்போதும் நிறையை கரியமில வாயு வெளிவருகிறது , அதை இன்னும் ஏன் தடைசெய்யவில்லை


Ms Mahadevan Mahadevan
அக் 31, 2024 17:24

சுற்றுச் சூழல் மனிதனை பெரும்பாலான செய்யல்களால் பாதிக்கப் படுகிறது. பட்டாசாலும் பாதிக்கப் படுவதை பெரிதாக சொல்லி அந்த தொழிலை முடக்கப் பார்ப்பது தவ்ரு. லட்ச கணக்கானோ ருக்கு வேலை. வாய்ப்பு ஏறுமதியால் அந்நிய செலவாணி தரும் பட்டாசு தொழிலில் இடையூறுகள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டியது அவசியம். உலகெங்கிலும் பட்டாசு வெடிக்கப் பட்டு மகிழ்ச்சி அடைகின்றனர். விபத்து எந்த தொழிலில் தான் இல்லை. நேர கட்டுப்பாடுகள் தளர்த்த பட வேண்டும்.


Sivagiri
அக் 31, 2024 16:03

இதில் சீன பட்டாசுகள் எவ்வளவு ? , முன்பு ரிலையன்ஸ் சீன பட்டாசுக்கு ஹோல்சேல் எடுத்து சிவகாசி பட்டாசுக்கு கடும் வீழ்ச்சியை கொடுத்ததாமாம் , . .


Edwin Jebaraj T , Tenkasi
அக் 31, 2024 13:36

இந்த வருடத்தில் பட்டாசு தயாரிக்கும் போது வெடித்து இறந்த தொழிலாளர்களின் வீட்டில் தீபாவளியன்று எப்படி இருக்கும் என்று யாராவது எண்ணியதுண்டா. இவ்வாறு எத்தனை எத்தனையோ வருடா வருடம் நடக்கும் உயிர்பலிகளை நிறுத்த அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று யோசித்தால் ஒன்றுமில்லை என்பதே. பாவம் ஏழை தொழிளாளர்கள்.. ஊழலில் ஊறிப் போன அரசியல்வாதிகள் உள்ள என் இந்திய நாட்டில் மட்டுமே இது நடக்கும் .


Ganapathy
அக் 31, 2024 15:10

நீ கிறிஸ்தவன். எதுக்கு எங்கஹிநாது பண்டிகை தீபாவளி விஷயத்துல முக்கை தேவையில்லாம நுழைக்குற? தீபாவளி ஒரு ராள் கொண்டட்டம்தான். ஆனா உன் பாதிரிகள் 24 மணிநேரமும் வருசம் முழுக்க மெழுகுவத்தியை மூடிய சர்ச்சு கட்டிடடத்தில் ஏத்தி ஆளுங்களை மூச்சுத்திணறடிச்சு கொல்றாங்களே அது எப்படிப்பட்ட கொடூரமான பக்தி? மொதல்ல அரசு இந்த கொடியவழக்கத்தை நிறுத்தணும். முரண்டு புடிக்குற பாதிரிகளை கொலைக்குற்றப்பிரிவில் கைது செய்யணும்.


Ganesun Iyer
அக் 31, 2024 20:54

எட்வின் சாமி, டாஸ்மாக்னால உயிர்பலி ஆகறத பத்தியோ, நியூ இயர் அல்ல எந்த ஆக்ஸிடென்ட் பத்தி கவல படுங்க.. தீபாவளி பத்தி நாங்க பாத்துக்கறோம்..


தமிழ்வேள்
நவ 01, 2024 20:07

ஐயா,கிறிஸ்துமஸ் ஆங்கில புத்தாண்டு இரவு முழுவதும் பட்டாசு கொளுத்தி ஊர் முழுவதும் தூக்கம் கெடுத்து இம்சை செய்கிறீர்கள்.அப்போது இந்த உபதேசம் ஒத்து வராதா? அல்லது பட்டாசு தொழிலாளர் அனைவரும் கோடீஸ்வரர் ஆகிவிடுவார்களா? இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு இதை சொல்லுங்களேன் பார்ப்போம்.


Ram pollachi
அக் 31, 2024 13:30

இனி பட்டாசுகளை வாங்கி வெடிக்க முடியாது, வெடிச்சா கண்ணில் பார்த்து ரசிக்கலாம்.... காரணம் கடுமையான விலை ஏற்றம்.... துணிகள் மட்டும் சுமாரான விலையில் கிடைக்கிறது, இனிப்பு காரம் வகையறாக்கள் விலையை கேட்டால் ஈ எறும்பு கூட பக்கம் போகாது.... வேலை இல்லை பணம் இல்லை ஆனால் எங்கு பார்த்தாலும் கூட்டம் பண்டிகை வந்தால் கையிருப்பு கரைந்து விடும்...


Ramesh Sargam
அக் 31, 2024 12:57

அதைவிட டாஸ்மாக் சரக்கு விற்பனை அதிகம். சாராயம் காய்ச்சிகள் திமுகவினர் மிகுந்த ஹாப்பி.


Svs Yaadum oore
அக் 31, 2024 12:20

பட்டாசுகளை வெடிப்பதால் சுற்று சூழல் மாசுபடுகிறது என்று தமிழக விடியல் அரசு மாசு கட்டுப்பாடு வாரியம் ......குமரி மாவட்டத்தில் ஒரு மாசத்துக்கு கிட்டத்தட்ட 40 லாரி வண்டி கோழி மீன் கழிவு கேரளாவிலிருந்து ஏற்றி வந்து குமரியில் கொட்டுகிறார்கள் ....இதுமாதிரி, 10 வருசமா நடக்குதாம் .....அதற்குமேல் கேரளா மருத்துவ கழிவை 25 வருஷமாக தமிழ் நாடு எல்லையில் கொண்டுவந்து கொட்டுகிறார்கள் ....இதெல்லாம் கேட்க இந்த மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு வக்கில்லை ....ஆனால் ஒரு நாள் ஹிந்து மத பண்டிகைக்கு மாசு மாசு என்று சுற்று சூழல் மேல் ரொம்ப அக்கறை உள்ளது போல இந்த மாசு வாரியம் ஒப்பாரி


வைகுண்டேஸ்வரன்
அக் 31, 2024 21:59

அது மாசு வாரியம் அல்ல. மாசு கட்டுப்பாட்டு வாரியம். CPCB. ஒன்றிய அரசின் கீழே செயல்படுகிறது. பூபேந்தர் யாதவ் தான் அமைச்சர். அவரு கிட்ட போயி சொல்லிப்பாரு, போ


Svs Yaadum oore
அக் 31, 2024 12:16

தீபாவளி பண்டிகை தினத்தன்று, காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என்று கூற விடியல் அரசு தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு என்ன அதிகாரம் உள்ளது ??.....


புதிய வீடியோ