உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செம்பரம்பாக்கம் ஏரியில் 6 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் 6 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று (டிச.,14) பகல் 12 மணி முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. மொத்தம் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி 23.29 அடியை எட்டியது. இதனால் முதல்கட்டமாக நேற்று காலை முதல் ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று மாலை நீர் திறப்பின் அளவு 4,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இன்று (டிச.,14) பகல் 12 மணி முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீராக அதிகரிக்கப்பட்டது.திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Bhaskaran
டிச 15, 2024 13:49

மொத்தமாக திறந்து விடுங்க தண்ணீர் லாரி காரர்களிடம் வாங்கியதுக்கு செஞ்சோற்று கடனை தீருங்கள்


Narayanan Ganesan
டிச 14, 2024 14:50

2015 வருடத்திலிருந்து தூர் வாரலே நடக்காத காரணத்தால் வீணாக நீர் கடல் நோக்கி செலுத்தப்படுகிறது.


angbu ganesh
டிச 14, 2024 14:24

இப்படியே தொறந்து விட்டுட்டு அப்புறம் தண்ணி இல்லேன்னு சொல்லுவானுங்க இவனுங்களை எல்லாம் என்ன சொல்ல செம்பரம்பாக்கம் எரிய நல்ல பாதுகாப்பு பண்ணி வச்சா அது நம்மள பாதுகாக்கும் ஆனா இவனுங்க பண்ண மாட்டனுங்க இவனுங்களே நம்பி பிச்சை எடுக்கனுனும்


Sudhakar
டிச 14, 2024 16:38

ஏரியின் பின் புறம் முழுவதும் மண் நிரம்பி கிடக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை