வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதுதான் விடிய அரசு! வெளங்கிடும்..... ஒரு வேளை சின்னவர் அனுமதி கிடைக்கவில்லையோ!
தமிழகத்தில் உள்ள, 642 அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்லுாரிகளில், கடந்த ஆண்டு பி.எட்., பட்டம் பெற்ற, 60,000க்கும் அதிகமானோருக்கு, ஓராண்டுக்கு மேலாகியும், தற்காலிக பட்ட சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், அவர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது.பல்கலை மானியக்குழு விதிகளின்படி, எந்த ஒரு தேர்வாக இருந்தாலும், அதன் முடிவுகள் வெளியான நாளில் இருந்து, 180 நாட்களுக்குள், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ், பட்டச்சான்று உள்ளிட்ட, அனைத்து சான்றிதழ்களும் வழங்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு மே மாதம் தேர்வு நடத்தப்பட்டு, சில வாரங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட, பி.எட்., தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஓராண்டுக்கு மேலாகியும், இன்று வரை எந்த சான்றிதழும் வழங்கவில்லை.இதனால், பி.எட், பட்டம் பெற்று, ஓராண்டுக்கு மேலாகியும், 60,000க்கும் அதிகமான பட்டதாரிகளால், எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. அவர்களின் வாழ்க்கையுடன், தி.மு.க., அரசு விளையாடுவதை அனுமதிக்க முடியாது.-அன்புமணி,தலைவர், பா.ம.க.,
இதுதான் விடிய அரசு! வெளங்கிடும்..... ஒரு வேளை சின்னவர் அனுமதி கிடைக்கவில்லையோ!