உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நித்தியானந்தா ஆசிரம சீல்களை அகற்றிய 7 சீடர்கள் கைது

நித்தியானந்தா ஆசிரம சீல்களை அகற்றிய 7 சீடர்கள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்துாரில் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு வைத்த சீல்களை அகற்றி உள்ளே சென்ற சீடர்கள் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே கோதை நாச்சியார்புரம், சேத்துார் ஆகிய இடங்களில் தனியார் சார்பில் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு 40 ஏக்கரில் இடம் வழங்கப்பட்டது. இங்கு ஆசிரமங்கள கட்டப்பட்டு நித்தியானந்தா சீடர்கள் தங்கி வழிபட்டு வந்தனர்.நித்தியானந்தா குறித்து சர்ச்சை வெளியானதை அடுத்து தானம் வழங்கிய இடங்களின் பத்திரங்களை ரத்து செய்யக்கோரி தானமாக கொடுத்தவர் சிவகாசி ஆர்.டி.ஓ.,விடம் மனு செய்தார்.அந்த இடங்களை இரு தரப்பினரும் பயன்படுத்தக் கூடாது என ஆர்.டி.ஓ., பிரியா ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.இதையடுத்து தாசில்தார் ராமசுப்பிரமணியன் மார்ச்21ல் இரு ஆசிரமங்களிலும் இருந்த சீடர்களை வெளியேற்றி சீல் வைத்தார்.நேற்று அதிகாலை இரு ஆசிரமங்களின் சீல்களை உடைத்து மீண்டும் சீடர்கள் உள்ளே சென்றனர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் போலீசில் புகார் அளித்தனர்.ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் ஆசிரமத்தில் புகுந்த உதயகுமார், தீபா, பிரேமா, தாமரைசெல்வி, ரேவதி, சேத்துார் ஆசிரமத்தில் புகுந்த நித்யா சாரானந்த சுவாமி, நித்யா சுத்த ஆத்மானந்த சுவாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Anandan
மார் 29, 2025 05:07

இது ஊடகங்களின் அப்பட்டமான பொய்கள், தயவுசெய்து மற்ற வீடியோ ஆதாரங்களைப் பார்க்கவும். நீதிமன்ற உத்தரவைப் பார்க்கவும்.


Ramesh Sargam
மார் 25, 2025 12:24

இப்பொழுது அந்த இடத்தை திமுக கண்மணிகள் ஆட்டை போடும்.


baala
மார் 25, 2025 10:32

எவனுக்கு தானம் கொடுக்க வேண்டும் என்று தெரியாதவர்கள் .


பிரேம்ஜி
மார் 25, 2025 07:56

தானம் கொடுத்தவன் கொழுப்பெடுத்தவன்!


பிரேம்ஜி
மார் 25, 2025 07:52

நித்யானந்தா கடவுள்தானே? அவர் ஆணையிட்டால் கதவுகள் தானா திறக்குமே? சிஷ்யர்கள் அவரிடம் சொல்லாததால் பிரச்சினை ஆகிவிட்டது போல இருக்கிறது!


GMM
மார் 25, 2025 07:12

தானம் கொடுத்த இடம் உரிய முறையில் பயன் படுத்தவில்லை என்று கூறி, தான பாத்திரத்தை சார் பதிவாளர் அலுவலகத்தில் ரத்து செய்ய வேண்டும். மறுத்தால் மாவட்ட பதிவாளரிடம் உரிய அசல் ஆவணங்கள், சமர்ப்பித்து ரத்து கோரிக்கை வைத்து, விசாரணையில் கலந்து உத்தரவு பெற வேண்டும். சில வழக்கறிஞர் ரத்திற்கு நீதிமன்றம் உத்தரவு தேவை என்பர். தானம் பெற்றவர் உரிய சட்ட காரணம் சொல்லவில்லை என்றால், மன்றம் உத்தரவு தேவையில்லை. பட்டா, தீர்வை பெயர் மாற்றம் உடன் செய்ய வேண்டும்.


அருண், சென்னை
மார் 25, 2025 07:12

எங்கெல்லாம் இடம் இருக்கோ அங்கெல்லாமிப்படி நடக்கும். ஆட்டைய போடணும் அது திமுகா கவுன்ஸிலரோட வேலை... அதுவும் ஹிந்து இடம்னா கொண்டாட்டம்தான்... எங்க ஊரில் கோவில் நிலங்கள் ஆட்டையை போடுறாங்க... நிறைய இடத்தில் நடக்கிறது...


Sidharth
மார் 25, 2025 11:13

ஆமாஜி


Appa V
மார் 25, 2025 06:42

என்னமோ எதோ என்று பதறிவிட்டேன் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை