புதுமைப்பெண் திட்டத்தால் 7 லட்சம் மாணவியர் பயன்
சென்னை: சென்னை பெரும்பாக்கம், அரசு கலை - அறிவியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. இதில், உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது: பெண்கள் உயர் கல்வி பெற, 'புதுமைப்பெண்' திட்டத்தை, முதல்வர் அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், இதுவரை ஏழு லட்சம் மாணவியர் பயன் பெற்றுள்ளனர். அதேபோல், 'நான் முதல்வன்' திட்டத்தின் வாயிலாக, மூன்று ஆண்டுகளில், 41 லட்சம் மாணவ, மாணவியருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் காரண மாக, இந்திய குடிமைப் பணி தேர்வுகளிலும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவு தேர்ச்சி பெற்று உள்ளனர். தமிழக அரசின் திட்டங்களால், இந்தியாவிலேயே உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. மேலும், முனைவர் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்களும் தமிழகத்தில் அதிகம். இவ்வாறு அவர் பேசினார்.