உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்சம் வாங்கிய வழக்குகளில் அரசு அதிகாரிகள் 8 பேருக்கு சிறை

லஞ்சம் வாங்கிய வழக்குகளில் அரசு அதிகாரிகள் 8 பேருக்கு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை,: லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்குகளில், கடந்த மாதத்தில் மட்டும், போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., - வி.ஏ.ஓ.,க்கள் என, அரசு அதிகாரிகள் எட்டு பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.பொதுமக்கள் கொடுக்கும் புகார் அடிப்படையில், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி, லஞ்சம் வாங்குவோரை கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சார்--பதிவாளராக வேலை பார்த்த சசிகலா, பத்திரப்பதிவு செய்ய 8,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது பிடிபட்டார். அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 8,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தலைமை காவலராக பணிபுரிந்தவர் மதியழகன். இவர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் லாரி ஒன்றுக்கு மாதம், 1,000 ரூபாய் தர வேண்டும் எனக்கூறி, லஞ்சமாக, 3,000 ரூபாய் பெற்றார். இவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை, 20,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்குகளில், கடந்த மாதத்தில் மட்டும், இரண்டு வி.ஏ.ஓ.,க்கள் உட்பட அரசு அதிகாரிகள் எட்டு பேருக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ராஜா
ஜூன் 02, 2025 09:22

புகைப்படங்களுடன் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக குற்றங்களை தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன்


Padmasridharan
ஜூன் 02, 2025 08:44

சென்னை திருவான்மியூர் கடற்கரையில் இன்ஸ்பெக்டருக்கு தெரிந்தே பல காவலர்கள் குறைந்த பட்சம் 3000௹ இளைஞர்களிடமிருந்து mobile phoneஐ பிடுங்கி, passwordஐ திறக்க வைத்து account check செய்து ஒருமையில் பேசி, அதட்டி, மிரட்டி, அடித்து வாங்குகின்றனர். இந்த காவலர்கள் இளைஞர்களை தங்கள் வண்டியில் கூட்டிக்கொண்டு, கிட்டே இருக்கும் ATM க்கும், கடைகளுக்கும், அறைக்கும் அழைத்தும் செல்கின்றனர்.


Sundaran
ஜூன் 02, 2025 07:30

கவலை பட வேண்டாம். உயர்நீதி மன்றம் சென்றால் தண்டனை நிறுத்தி வைக்கப்படும். பதவியில் தொடரலாம். தீர்ப்பு varuvatharkkul பணிக்காலம் முடிந்துவிடும். வாழ்க நீதி


ديفيد رافائيل
ஜூன் 02, 2025 08:37

பணி காலம் முடிந்து தண்டனை கிடைத்தாலும் retirement benefits கிடைக்காது.


Raghavan
ஜூன் 02, 2025 10:59

இதுதான் நாட்டில் இப்பொது நடந்துக்கொண்டுஇருக்கிறது. மூலகாரணமே அரசியல்வாதிகள்தான்.


sekar ng
ஜூன் 02, 2025 07:19

பொய் நீதிமன்றம் விடுவித்துவிடும். தொடர்ந்து ஊழல் நடந்தால் தான் நீதி மன்றத்திற்கு லாபம். விரைவில் அனைவரும் விடுதலை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை