உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 80 சீட் தர வேண்டும்: அ.தி.மு.க., கூட்டணியில் சேர விஜய் நிபந்தனை

80 சீட் தர வேண்டும்: அ.தி.மு.க., கூட்டணியில் சேர விஜய் நிபந்தனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அ.தி.மு.க.,வுக்கு, 154; த.வெ.க.,வுக்கு, 80 என தொகுதி பங்கீடு செய்து, சட்டசபை தேர்தலை கூட்டாக சந்திக்க, இரு கட்சிகளும் பேசி வருகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gfg3z6um&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின், தென் மாவட்டங்களில் அக்கட்சியின் ஓட்டு வங்கி குறைந்துள்ளது. ஆனால், நீக்கியவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என்பதில், பொதுச்செயலர் பழனிசாமி உறுதியாக இருக்கிறார். பா.ஜ.,வுடன் மீண்டும் கூட்டணி இல்லை என்பதிலும் தெளிவாக இருக்கிறார்.

உடையவில்லை

அதேநேரம், ஆளும் தி.மு.க., கூட்டணியில் சலசலப்புகள் எழுந்தாலும், பழனிசாமி கணித்தது போல, அது உடையவில்லை. 'அடுத்த தேர்தலை சேர்ந்தே சந்திப்போம்' என்று, அதில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் கூறுகின்றன. அந்த கூட்டணியை பழனிசாமியால் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று, அவரது கட்சியினரே திகைத்து நின்ற நேரத்தில், நடிகர் விஜய் களமிறங்கி இருக்கிறார். தி.மு.க., எதிர்ப்பை அவர் பிரதானமாக கையில் எடுத்திருப்பது, அ.தி.மு.க.,வுக்கு இணக்கமான அம்சம். எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அக்கட்சியை விஜய் இதுவரை விமர்சிக்கவில்லை என்பது, இன்னொரு பிளஸ் பாயின்டாக பார்க்கப்படுகிறது. ஆட்சி, அதிகாரத்தில் இல்லாத கட்சியை விமர்சனம் செய்வதில் அர்த்தம் இல்லையே என்று, விஜய் கட்சியினர் விளக்கம் அளிக்கின்றனர். அதில், நியாயம் இருந்தாலும், பாரம்பரியமான தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை வைத்துள்ள அ.தி.மு.க.,வை விமர்சிப்பது, தன் புதிய கட்சியின் வளர்ச்சிக்கு உதவாது என்பதை விஜய் உணர்ந்துள்ளார். இதையே அவரது மவுனம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.இந்தியாவில், 50 சதவீத ஓட்டுகளுக்கு மேல் வாங்கி, உண்மையான பெரும்பான்மையுடன் எந்த கட்சியும் ஆட்சிக்கு வருவது இல்லை. 25 முதல், 30 சதவீத ஓட்டுகளை பெற்று, பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதே வாடிக்கையாக நடக்கிறது.

தக்கவைக்கின்றன

அதாவது, எதிர்ப்பு ஓட்டுகள் பல கட்சிகளுக்கு பிரிந்து செல்வதால், பிரதான கட்சி ஆட்சியை பிடிக்கவோ, தக்க வைக்கவோ முடிகிறது. இந்த பின்னணியில் தான், பலமான கூட்டணிக்கு அவசியம் ஏற்படுகிறது. பழனிசாமியும், விஜயும் அப்படிப்பட்ட ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இளைஞர் பட்டாளத்தை எளிதில் திரட்டும் சக்தி பெற்றவர் என்பதை, முதல் மாநாடு வாயிலாக விஜய் நிரூபித்து உள்ளார். ஓட்டு வங்கியில் விரிசல் விழுந்தாலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள் வெளியேறவில்லை என்பதை பழனிசாமி காட்டியுள்ளார். இருவரின் பலமும் சேரும் போது, தி.மு.க.,வின் வலுவான கட்டமைப்பை சேதப்படுத்த முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

விரும்பவில்லை

தனித்து நிற்பேன் என்று முழக்கம் எழுப்பி, ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு சதவீதம் அதிக ஓட்டு வாங்கி வாழ்நாள் முழுதும் கோட்டை வாசலுக்கு வெளியே நின்று வேடிக்கை பார்க்க விஜய் விரும்பவில்லை. ஆட்சி கட்டிலுக்கு கூட்டணி தான் பாதை என்று நாடெங்கும் உறுதியான பிறகு, என் வழி தனி வழி என்பதெல்லாம் போகாத ஊருக்கு வழி என்று அவர் புரிந்து கொண்டிருக்கிறார். அதே சமயம், பத்தோடு பதினொன்றாக எந்தக் கூட்டணியிலும் சேர அவர் தயாராக இல்லை. அதன் விளைவு தான், அ.தி.மு.க.,வை நோக்கி அவரை நகர வைத்துள்ளது என்று விஜய்க்கு நெருக்கமான ஒரு ஆலோசகர் தெரிவித்தார். அ.தி.மு.க.,வின் ஆரம்ப காலத்தில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த போது, 70:30 என்ற விகிதத்தில் தொகுதிகளை பங்கிட்டனர். அதன்படி அ.தி.மு.க.,வுக்கு 163, காங்கிரசுக்கு 71 என, பிரிக்க முடிந்தது. எம்.ஜி.ஆர்., பார்முலா என்றே அதற்கு பெயர் சூட்டினர். விஜய் அதிலும் ஒரு அடி முன்னால் செல்ல விரும்புகிறார். த.வெ.க.,வுக்கு, 80 கேட்கிறார். அப்படி கொடுத்தால் அ.தி.மு.க.,வுக்கு, 154தான் மிஞ்சும்.

விசுவரூபம்

எப்படியும் சிறு கட்சிகள் வரத்தான் செய்யும். அவர்களுக்கு ஒன்றிரண்டு கொடுத்தால் இன்னும் குறையும். மெஜாரிட்டிக்கு தேவையான, 118 தொகுதிகளை வெல்ல முடியுமா என்ற குழப்பம் உருவாகும். எழுந்தால் ஒரே பதில், கூட்டணி ஆட்சி என்பது தான். ஆக, விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் முன்மொழிந்த இலக்கை பழனிசாமி வழி மொழிவாரா என்ற கேள்வி தான் விசுவரூபம் எடுத்து நிற்கிறது. அப்படி நடந்து வெற்றியும் வசமானால், பழனிசாமி முதல்வர், விஜய் துணை முதல்வராகலாம். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, தன் ஈகோவை கழற்றி வைத்து விட்டு, நடிகர் பவன் கல்யாண் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது போல, பழனிசாமியும் செய்தால் முதல் தேர்தலிலேயே துணை முதல்வர் நாற்காலியில் அமரலாம் என, விஜய்க்கு ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது. இறுதி முடிவு எதுவும் எட்டவில்லை என, இரு கட்சிகளின் நிர்வாகிகளும் கூறுகின்றனர். விட்டுக் கொடுக்கும் தொகுதிகளில் உள்ள நிர்வாகிகளையும் தொண்டர்களையும் எப்படி தயார்படுத்துவது என்பதில் தயக்கம் நிலவுவதாக இருவரும் ஒப்புக் கொண்டனர். 'விஜய் சுற்றுப்பயணம் சென்று வந்த பின்னரே எதையும் உறுதியாக கூற முடியும்' என்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Palanisamy T
நவ 19, 2024 17:51

அட எல்லா தொகுதிகளையும் நீங்களே யெடுத்துக் கொள்ளுங்கள். உங்களின் ரசிகப் பெருமக்களின் மேலுள்ள நம்பிக்கை இக் குறுகியகாலத்தில் குறைந்து விட்டதா?


elangovan
நவ 18, 2024 13:22

நல்ல கற்பனை..... எது எப்படியோ.... இன்று இந்த செய்திக்கு விஜய் கட்சி முற்றுப்புள்ள்ளி வைத்துள்ளது. கோர்ட் இரு கட்சிகளையுமே குறை சொல்லியுள்ள இந்த நேரத்தில் இந்த செய்தி முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஆக விஜயுடன் திமுக இல்லை .... அதிமுக இல்லை.... பிறகு..... அன்புமணியும்.... திருமாவும்.... அட.... கேட்க நல்லா இருக்கே..


MADHAVAN
நவ 18, 2024 11:05

சர்க்கார் படத்தில விஜய், கோமளவல்லி னு ஜெயலலலிதாவைத்தான் சொன்னாரு, அப்பொறம் எப்படிடா அதிமுக கூட கூட்டணி சேரும்


வைகுண்டேஸ்வரன்
நவ 17, 2024 21:58

நல்ல கற்பனை. அதாவது 154 இடங்களில் தனது ரசிகர்களை ரெட்டை இலைக்கு ஓட்டு போட சொல்லி விஜய் கேட்பார். அவிங்களும் போடுவாங்களா? இதுக்கு பருத்தி மூட்டை கோடவுனிலேயே இருந்திருக்கலாமே.


ராமகிருஷ்ணன்
நவ 17, 2024 17:35

கூட்டணி பேசுவதில் சிறிதும் திறமையற்ற எடப்பாடிக்கு வந்துள்ள சோதனை. நிச்சயம் சொதப்பி விடுவார்.


Rasheel
நவ 17, 2024 11:44

சில தொகுதிகளில் 1000 - 2000 வோட்டு கிடைக்கலாம் மத பின்னணியை கொண்டு. சொத்தை பாதுகாக்க, பெருக்க அரசியல் ஒரு பெரு வழி.


vadivelu
நவ 17, 2024 14:00

சில தொகுதிகளில் தி மு க கூட்டணி இவரிடம் 1000, 2000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடையலாம்.


AMLA ASOKAN
நவ 17, 2024 10:08

சினிமா படத்தில் நடிப்பதை போல் , ஒரு மாநிலத்தின் ஆட்சியை அவ்வளவு எளிதாக நடத்திவிட முடியும் என்று ஒரு நடிகர் எண்ணுவதும், அதற்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் என்று நம்புவதும் பிஹாரில் நடக்கலாம். ஒரு கிராமத்தின் கவுன்சிலராக கூட அனுபவமில்லாத ஒருவர் , சட்டசபையை பார்த்திராத ஒருவர் , மாநில மத்திய ஆட்சியுறவு பற்றி தெரியாத ஒருவர் , கோடிக்கணக்கில் கருப்புப்பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒருவர் , எந்த அரசியல் தலைவரையும் சந்திக்காத ஒருவர் , அறிவாற்றல் அல்லது நேரடியாக மக்கள் தொடர்பு அல்லாமல் தன் நடிப்பால் மட்டுமே ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி அவர்களையே MLA ஆக்கப்போகும் ஒருவர், பௌன்சர்களுடன் உலா வரும் ஒரு நடிகர், ஒரு சின்ன இலாக்காவிற்கு கூட அமைச்சராவதற்கு தகுதியற்றவர், தமிழக அரசியலில் ஊழலை ஒழிக்கப்போகிறேன் என முழக்கமிட்டுளார். ஆனால் ADMK உடன் கூட்டணி பேசுகிறார். இவரை தெய்வமாக போற்றும் 20 லட்சம் ரசிகர்கள் வேண்டுமானால் இவருக்கு ஓட்டுபோடுவார்கள் . மீதி ரசிகர்கள் சுய அறிவுடன் தாங்கள் விரும்பும் கட்சிக்கு தான் போடுவார்கள் . இவருடன் கூட்டணி வைத்தால் ADMK தன் கட்சி தொண்டர்களை இழக்கும் .


sethu
நவ 17, 2024 09:33

இந்த போட்டோவில் எப்போதும் திருநீர்வைத்த எடுபுடி இப்போது எம்டி நெற்றி ஆனால் சிலுவை சுமக்கும் விஜய் திருநீர் அணிந்துள்ளான் இதென்ன இரண்டும் ஏமாற்றும் பேர்வழிகள் என்பதை தெளிவாக உணர்த்தியதற்கு நன்றி


வாய்மையே வெல்லும்
நவ 17, 2024 09:27

இந்தமாதிரி விசயத்துக்கு தந்தையார் இயக்குனர் கிறிஸ்து சந்திரசேகர் படித்தாலே அவரே கடுப்பாகிவிடுவார். நடிப்பு தொளபதி தான்தோன்றித்தனம் அப்பட்டமாக தெரியுது


KARTHIRAJAN
நவ 17, 2024 09:10

இது ஒரு அல்ல தொடக்கமாக இருக்கும். தி.மு.க வை வீழ்த்த சரியான ஒரு வழி இது.


சமீபத்திய செய்தி