வாசகர்கள் கருத்துகள் ( 1 )
6 கோடி மக்களில், பாதிக்கப் பட்டோர், 81 பேர்... அதையும் போடுங்க...
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி, பட்டாசு வெடித்ததில், 5,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.இதில், மாநிலம் முழுதும் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைகளில், 776 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில், 81 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 29; கோவையில் 17; புதுச்சேரியில் 11; திருநெல்வேலியில் ஏழு; சென்னையில் ஆறு பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.கண் டாக்டர்கள் கூறியதாவது: மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு, பார்வை இழப்பு தடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று தாமதமாக வந்தவர்களுக்கு, பாதிப்பு அதிகமாக இருந்ததால் பார்வை இழப்பை தடுக்க முடியவில்லை.
6 கோடி மக்களில், பாதிக்கப் பட்டோர், 81 பேர்... அதையும் போடுங்க...