உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை திரும்புவோருக்கு 8,200 பஸ்கள்

சென்னை திரும்புவோருக்கு 8,200 பஸ்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொங்கல் பண்டிகை முடித்து, சென்னை திரும்புவோருக்காக, இன்றும், நாளையும் 8,200 சிறப்பு பஸ்கள் இயக்க, அரசு போக்குவரத்துக் கழகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. பொங்கல் பண்டிகை கொண்டாட, சென்னையில் இருந்து, அரசு பஸ்களில் 8.73 லட்சம் பேர் வெளியூர் சென்றனர். இவர்கள் விடுமுறை முடிந்து, இன்றும், நாளையும் சென்னை திரும்ப உள்ளனர். அவர்கள் வசதிக்காக, பல்வேறு ஊர்களில் இருந்து, சென்னைக்கு இன்று 3,600, நாளை 4,600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல், சென்னை தவிர்த்து முக்கிய நகரங்களில் இருந்து, மற்ற ஊர்களுக்கு, இன்று 1,200; நாளை 3,400 பஸ்கள் இயக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஜன 18, 2025 07:24

அழகாக பெயிண்ட் அடித்து வைத்திருக்கிறார்கள் என்று நம்பி பொது மக்கள் அரசு போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள். பராமரிப்பு இல்லாத பாடவதியான விடியல் மாடல் பேருந்து என்றால் நன்கு திருவள்ளுவரையம் அவரது எண்ணித்துணிக கருமம் என்பதையும் நினைவில் வைத்து, யோசித்து ஏறவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை