போதைப்பொருள் வழக்குகளில் 8,983 பேருக்கு சிறை
சென்னை: போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் மூன்று ஆண்டுகளில், 8,983 பேருக்கு சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்து வருகின்றனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, தகுந்த ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலத்தை சமர்ப்பித்து, சிறை தண்டனைகள் பெற்றுத் தருகின்றனர். அந்த வகையில், மாநிலம் முழுதும் மூன்று ஆண்டுகளில் கைதான நபர்கள் தொடர்பான வழக்குகளில், 8,983 பேருக்கு சிறை தண்டனைகள் பெற்றுத் தரப்பட்டுள்ளன. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை உயரும் என, போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர். ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டோர் விடுதலை 2023 2,988 3,567 579 2024 2,308 3,141 833 2025 3,687 5,174 958 * 2025 ஆகஸ்ட் வரை