உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 9 சட்ட மசோதாக்கள் : கவர்னர் ரவி ஒப்புதல்

9 சட்ட மசோதாக்கள் : கவர்னர் ரவி ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய ஒன்பது சட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழக சட்டசபையில், நிதி நிர்வாக பொறுப்புடமை சட்ட மசோதா, 2022 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டு, கவர்னர் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவில், சில குறைகளை சுட்டிக்காட்டி, கவர்னர் ரவி திருப்பி அனுப்பினார். கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில், 16 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இதில், தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு கடல்சார் வாரிய திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு மின் நுகர்வு விற்பனை வரி மீதான வரி திருத்த மசோதா, தமிழ்நாடு ஊதியம் வழங்கல் திருத்த சட்ட மசோதா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வூதிய உயர்வு சட்ட மசோதா, சிறு குற்றங்களுக்கு தண்டனைகளுக்கு பதிலாக அபராதம் விதிக்கும் சட்ட மசோதா உட்பட ஒன்பது சட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய நிதி நிர்வாக பொறுப்புடமை சட்ட மசோதாவுக்கும், கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
நவ 01, 2025 06:10

நீதிமன்றம் கவர்னரின் கடமையை செய்ய விடமால் மிரட்டுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. மாநில நிர்வாகத்தை மத்திய அரசு கண்ணாணிக்க கவர்னர் நியமிக்கப்படுகிறார்.


GMM
அக் 31, 2025 22:10

தமிழக மாநில சட்ட மசோதா பிற மாநில மக்கள், தேசிய நிர்வாகத்திற்கு எதிராக இருக்க முடியாது. சிறு குற்ற தண்டனைக்கு எதிராக தமிழகத்தில் அபராதம். முன்பு வகுத்த தேசிய சட்டம் என்ன சொல்கிறது? சிறு குற்றத்திற்கு கேரளா, ஆந்திரா… என்ன நிலை? மாநில சுயாட்சி அமுலில் உள்ளதா? உச்ச மன்ற கடுமைக்கு அஞ்சி கவர்னர் ஒப்புதல் பிரிவினையை அதிகரிக்கும்.


nagendhiran
அக் 31, 2025 21:35

இந்த சட்டத்தால் மக்கள் உயர்வார்களோ என்னவோ? சமஉக்கள் நிலமை உயரும்?


K.n. Dhasarathan
அக் 31, 2025 21:21

அட கவர்னர் தானா அல்லது யாரும் பினாமியா? மேலும் உச்ச நீதிமன்ற குட்டு வாங்க தெம்பில்லையோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை