9 நகரங்களில் வெயில் சதம்; மேலும் சில நாட்களுக்கு வெயில் கொளுத்துமாம்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
சென்னை : தமிழகத்தில் நேற்று(மார்ச் 28) ஒரே நாளில், ஒன்பது நகரங்களில், வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக வேலுாரில், 106 டிகிரி பாரன்ஹீட், சேலத்தில், 103 டிகிரி பாரன்ஹீட், கோவை, தர்மபுரி, ஈரோடு, மதுரை, திருப்பத்துார், திருச்சி, திருத்தணி ஆகிய நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதே நிலை அடுத்த சில நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளது.