வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சவுக்கு சங்கர் சொன்ன முக்கிய குற்றவாளி God Father அவர்களுக்கு தண்டனை இல்லையா
மதுரை: மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில், 2009-ம் ஆண்டில் போலி பாஸ்போர்ட் வினியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரை, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர். புகார்கள் உண்மை என்றும், 22 பேருக்கு போலி பாஸ்போர்ட் வினியோகம் செய்யப்பட்டதும் உறுதியானது. இந்த வழக்கில், அப்போதைய மதுரை மண்டல அலுவலக உதவி பாஸ்போர்ட் அதிகாரி கீதாபாய், உதவியாளர் அன்பழகன், திண்டுக்கல் பேகம்பூர் போஸ்ட்மேன் செல்வதுரை, திண்டுக்கல் தெற்கு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேலு, எஸ்.பி., அலுவலக பணியாளர் சுரேஷ்பாபு, ஏஜன்டுகள் இப்ராகிம் மீரான், பக்ருதீன், ஷாஜகான், சுனிதா பானு ஆகியோர் சேர்க்கப்பட்டனர். மதுரை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், பக்ருதீன், ஷாஜகான், செல்வதுரை, சுரேஷ்பாபு ஆகியோருக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கீ தாபாய், இப்ராகிம் மீரான், சுனிதா பானுக்கு தலா, 3 ஆண்டுகள் தண்டனையும், தலா, 70,000 ரூபாய் அபராதமும்; அன்பழகன், தங்கவேலு ஆகியோருக்கு தலா, 2 ஆண்டுகள் தண்டனையும், தலா, 40,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சண்முகவேல் நேற்று தீர்ப்பளித்தார்.
சவுக்கு சங்கர் சொன்ன முக்கிய குற்றவாளி God Father அவர்களுக்கு தண்டனை இல்லையா