உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு மாதம் சிறை தண்டனை அமல்படுத்த 90 நாட்களுக்கு தடை

ஒரு மாதம் சிறை தண்டனை அமல்படுத்த 90 நாட்களுக்கு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதுாறு கருத்து பதிவிட்ட வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெண் பத்திரிகையாளர்கள் குறித்து, 2018ல் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக, சேகருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த, எம்.பி., - எம்.எல்.ஏ-.,க்களுக்கான சென்னை சிறப்பு நீதிமன்றம், சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15,000 ரூபாய் அபராதம் விதித்து, கடந்தாண்டு பிப்ரவரி 19ல் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சேகர் மேல்முறையீடு செய்துஇருந்தார்.இந்த வழக்கில், மறு உத்தரவு வரும் வரை தண்டனையை நிறுத்தி வைத்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கில், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வெங்கடேஷ் மகாதேவன், அரசு தரப்பில் வழக்கறிஞர் வினோத்குமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.நீதிபதி பி.வேல்முருகன் நேற்று தீர்ப்புஅளித்தார். அப்போது, சேகருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்தும், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.அப்போது, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், இந்த வழக்கில் பிறப்பித்த தீர்ப்பை நிறுத்தி வைக்கும்படி, சேகர் தரப்பில் கோரப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, 90 நாட்கள் தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது என, காவல் துறைக்கு உத்தரவிட்டார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Velan Iyengaar
ஜன 04, 2025 08:51

சிலம்பை தொட / தூக்கி பிடிக்க ஒரு அருகதை வேணுமா வேணாமா ??


வல்லவன்
ஜன 03, 2025 22:45

தூண்டுதல்


N Sasikumar Yadhav
ஜன 03, 2025 13:39

திராவிட மாடல் நிர்வாகி ஆர் எஸ் பாரதி சின்னவரு இவர்களும் திராவிட மாடல் நிர்வாகிகளும் வாய் கொழுப்பெடுத்து பேசியிருக்கிறார்கள் அவர்களுக்கு எந்தவித தண்டனையுமில்லையே திராவிட மாடலென்றால் நீதியும் வளைந்து கொடுக்குமோ


karthik
ஜன 03, 2025 12:35

என்னங்கடா இவனுங்க தீர்ப்பு.. இவனுகளே தீர்ப்பு குடுக்குறானுங்க.. இவனுங்களே நிறுத்தி வைக்கிறானுங்க...


Velan Iyengaar
ஜன 03, 2025 11:35

ஆட்டுகுட்டிக்கி குளு குளு என இருக்கும் ஆனால் ஆட்டுக்குட்டிக்கும் இந்த நிலை சீக்கிரம் வரக்கடவது


vadivelu
ஜன 03, 2025 15:33

வராது பாய்


M Ramachandran
ஜன 03, 2025 11:12

பொச்செரிச்சலின் விளைவு ஒரு மாத அரசு விருந்தாளி.


Velan Iyengaar
ஜன 03, 2025 11:12

வாய்க்கொழுப்பு ...இது மாதிரி இன்னும் பல கேஸுகள் இந்த வீனா போன உலகமகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் bj கட்சியில் இருக்கு ... எல்லாத்துக்கும் இது போன்ற தண்டனை கிடைக்க அரசு ஏது செய்தால் சமூகத்துக்கு நல்லது .....


தமிழன்
ஜன 04, 2025 11:09

நீங்க சொல்றபடி பாத்தா பாதி BJP காரங்க உள்ள இருப்பாங்க சார். ஆட்டுக்குட்டிக்கு ஆயுள் கண்டனை கொடுத்தாலும் கொடுப்பாங்க .


Velan Iyengaar
ஜன 03, 2025 11:09

எச் ராஜா வழக்கும் சீக்கிரம் ஒரு முடிவுக்கு கொண்டுவந்தால் ஒட்டுமொத்த சமுகத்துக்கு ரொம்போ நல்லது ... உள்ள உக்கார வெச்சி களி தின்னவைக்கணும் ...


KavikumarRam
ஜன 03, 2025 12:55

மொதல்ல சின்னத தூக்கி உள்ளவச்சா தமிழ்நாட்டுல பாதி பிரச்சினை குறையும். ஆனா வீரன்னு பேசுனா வென்று இந்தியா ஃபுல்லா கேஸ் ஃபைல் ஆனவுடனே அப்படியே பம்மி கட்டில் அடியில படுத்துட்டாப்ல. மொதல்ல அவனை வெளிய வரச்சொல்லு. அடுத்தவனை பத்தி அப்புறம் பேசலாம்.


M Ramachandran
ஜன 03, 2025 11:08

நாவடக்க மில்லாமல் பேசி ஒரு மாதா அரசு சாப்பாட்டுக்கு ரேடி அகி கொண்டிருக்காரு


KavikumarRam
ஜன 03, 2025 10:18

எஸ்விசேகர் எப்ப திமுகவின் ஊதுகுழலா மாறினாரோ அப்பவே அவருக்கு ஏழரை சனி ஆரம்பித்து விட்டது. தன்னோட சொந்த லாபத்துக்காக, மக்களின் வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டிக்கொண்டு, திமுக குடும்பத்தோட ஒட்டி உறவாடுபவன் எவனுமே வாழ்க்கைல உறுப்பட்டதா சரித்திரமே இல்ல. இதுவரைக்கும் சம்பாதிச்ச பெரு புகழ் காசு எல்லாத்தையும் புடிங்கிட்டு விட்டிருவானுங்க. இல்லேன்னா விதி அந்த பாதையில் அவர்களை தள்ளிவிட்டு விடும். விஜயகாந்த், தியாகு, ராதாரவி, எஸ்எஸ் சந்திரன், வடிவேலு, சிவகுமார் குடும்பம், சத்யராஜ் குடும்பம், சித்தார்த், வைரமுத்து இவர்களின் நிலைமையை பாருங்கள். கண்டிப்பாக அவர்கள் முன்பிருந்ததை விட இப்ப தரம்கெட்டு போயிருப்பார்கள்


Rpalni
ஜன 03, 2025 11:08

அண்ணே எப்படியிருந்த ஜெய்சங்கரை வண்டிக்காரன் மகன் என்ற டப்பா படத்தில் நடிக்க வைத்து வீணாய்ப் போகவைத்தவர் நம்ம கட்டு. அப்புறம் வடிவேலு. த்ரவிஷ கட்சிகளில் சேர்ந்தவர்கள் உறுபட்டதே இல்லே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை