உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 13 பேர் கோவையில் கைது; உ.பி.,யில் 90 பேர் சிக்கினர்!

சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 13 பேர் கோவையில் கைது; உ.பி.,யில் 90 பேர் சிக்கினர்!

கோவை: கோவையில் சட்ட விரோதமாக தங்கி இருந்த, வங்கதேசத்தினர் 13 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், உ.பி.,யில் வங்க தேசத்தினர் 90 பேரை போலீசார் கைது செய்தனர்.நாட்டின் பல பகுதிகளில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தினர் பற்றிய கணக்கெடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் நம் நாட்டிற்குள் நுழைந்து, இங்கேயே தங்கியுள்ள வங்கதேசத்தினரை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qm14bi6w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி உத்தர பிரதேசத்தின் மதுராவில் சட்ட விரோதமான முறையில் வங்கதேசத்தினர் பலர் வசிப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. காஜ்பூர் பகுதியில் போலீசார் வீடு வீடாக சோதனை நடத்தினர். அப்போது, சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 90 பேரை போலீசார் கைது செய்தனர். வங்கதேசத்தினருக்கு போலி ஆவணம் தயாரித்துக் கொடுக்கும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கோவையில் 13 பேர் கைது

கோவையில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, சட்ட விரோதமாக தங்கி இருந்த, வங்கதேசத்தினர் 13 பேரை கோவை பீளமேடு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் எப்படி வந்தனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

V.Mohan
மே 18, 2025 17:54

ஐயா, இத்தனை நாட்கள் வேறு நாட்டை சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுத்த இந்த நாட்டு துரோகிகளை கைது செய்யணும். ஆனால் கா(ஏ)வல் துறை செய்யாது. ஏனென்றால் இவர்களை தைரியமுடன் தமிழ் நாட்டின் பல மூலைகளில் இருக்க வைத்த துரோகிகள் விடியலின் கூட்டாளிகளே . கல்கத்தா மைமூன் பீபி பானர்ஜி தான் இந்த துரோகிகளுக்கு ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை தந்து வங்காளத்தில் முதலில் ஆரம்பிச்சாங்க. அவங்க கூட்டணியில் இருக்கிற திமுகவின் விடியல் ஓட்டு பிச்சைக்காக அங்கேயிருந்து அனுப்பி வைச்சிருக்காங்க. இவங்க இங்கே ஃபாலோ பண்றாங்க. இல்லாட்டா இந்த தொழிலதிபர்களின் பேராசை மற்றும் நியாயமற்ற லாபநோக்கம் தான் இவர்களை வேலைக்கு வைத்ததில் இருந்து வெளிப்படுகிறது.


Anonymous
மே 18, 2025 09:12

8 பேரு,13பேரு, 33பேரு... இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்கு? ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள், கண்துடைப்பு நாடகம் நடத்தி, 13பேரு, 20 பேருன்னு சொல்லி .... என்ன ஏமாற்று வேலை இது? கேட்குறவன் கேணையண்ணா , கேப்பையில நெய் .........


venugopal s
மே 18, 2025 06:49

தமிழகத்தையும் உத்தரப்பிரதேசத்தையும் சேர்த்து எழுதி தமிழக அரசைக் குறை கூற வழியில்லாமல் செய்து விட்டீர்களே!


Natarajan Ramanathan
மே 17, 2025 20:01

வேலை கொடுப்பவர்களுக்கும் தங்க வீடு கொடுப்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கவேண்டும். பொதுவாகவே மூர்க்கன்ஸ் என்றால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.


ganesh ganesh
மே 17, 2025 19:46

நல்லா செக் செய்யுங்கள் .இங்குள்ள வியாபாரிகள் அவர்களை ஹிந்திக்கும் பெங்காலிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் பணமே குறி என்று இருக்கும் நபர்கள்.


Ramesh Sargam
மே 17, 2025 19:14

எல்லோரையும் அவங்க அவங்க நாட்டுக்கே துரத்தவும்.


GMM
மே 17, 2025 18:41

ஓட்டலில் தங்க சுய சான்று தேவை. வீட்டில் உறவினர் தங்கலாம். அடையாளம் தெரியாத அன்னியர் தங்க அரசு அதிகாரிகள் முன் அனுமதி பெற வேண்டும். மேலும் மடம், ஜமாத் போன்ற தங்கும் இடங்களில் பதிவேடு பராமரிக்க வேண்டும். 24 மணியில் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தர வேண்டும். வாடகைக்கு விட்டால் வாடகை ஒப்பந்தம். சட்ட விரோத குடியேற்றம் நிரூபிக்க நீதிமன்ற வழக்கு, வாத அடிப்படையில் அதிகாரிகள் மிரட்ட படுவதால், அஞ்சி அமைதி ஆகி விடுவர். போலீஸ் அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கும்.


Karthik
மே 17, 2025 22:46

பொதுவாகவே உங்களின் கருத்துக்கள் ரத்தின சுருக்கமாகவே உள்ளது.


Arul. K
மே 17, 2025 17:46

வேலை கொடுப்பவருக்கும் தங்க இடவசதி கொடுப்பவருக்கு அதிகபட்ச தண்டனை கொடுத்தால் இந்த பிரச்சினை தானாகவே முடிவுக்கு வந்துவிடும்


Karthik
மே 17, 2025 22:44

அவ்வாறு செயல்படுத்தப்படுமானால் நீங்கள் சொல்வது போல் நடைமுறையிலும் சாத்தியமே..


V Venkatachalam
மே 17, 2025 17:45

அடடா திராவிடியா மாடல் அரசு கைது பண்ணிட்டுது அப்பிடீன்னு நெனச்சுட்டேன். மத்திய அரசு தான் கைது பண்ணியிருக்குன்னு தெரிஞ்சப்பறம் புஸ்ஸுன்னு ஆயிட்டு. இவன்களாவது கைது பண்ணுவதாவது..


RAJ
மே 17, 2025 17:06

இவனுங்களுக்கு யாரு தங்கறதுக்கு இடம் குடுத்தாங்களோ,, வேலை குடுத்தாங்களோ... அவனுங்கள தேச விரோத கேசுல அரெஸ்ட் பண்ணி.. வெளுக்கணும்


Karthik
மே 17, 2025 22:43

சரியாக சொன்னீர்கள்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை