சென்னை: கடந்த மார்ச் மாதம் மட்டும், சென்னை மெட்ரோவில் 92.10 லட்சம் பேர் பயணித்து உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.பயணியருக்கு சிறப்பான மெட்ரோ ரயில் சேவை வழங்குவதில் நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:சென்னை மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பு, நம்பகத்தன்மையான மற்றும் நிலையான கூட்டாளியாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திகழ்ந்து வருகிறது.இந்த ஆண்டு ஜன., மாதம் 86,99,344பிப்., மாதம் -86,65,803 மார்ச் மாதம் - 92,10,069 பேர் பயணித்து உள்ளனர். அதில், மார்ச் 7 ம் தேதி அதிகபட்சமாக 3,45,863 பேர் பயணம் செய்து உள்ளனர்.மார்ச் மாதத்தில் மட்டும்1. போக்குவரத்து அட்டையை பயன்படுத்தி -9,81,8492. டோக்கனை பயன்படுத்தி- 9,4923. குரூப் டிக்கெட்டிங் மூலம் - 2804. ஆன்லைன் கியூஆர் மூலம்- 1,59,3645. பேப்பர் கியூஆர் மூலம்- 19,41,9196.ஸ்டேட்டிக் கியூஆர் மூலம் - 2,89,959வாட்ஸ்ஆப் மூலம்-5,84,041பேடிஎம் மூலம்-4,46,116போன்பே மூலம்-3,60,001ஓஎன்டிசி மூலம் -1,84,592என்சிஎம்சி சிங்கார சென்னை அட்டை மூலம்- --42,52,456 பேர் பயணித்து உள்ளனர்.தற்போது,மெட்ரோ பயண அட்டை, மொபைல் கியூஆர் கோட், வாட்ஸ் ஆப், பேடிஎம், போன்பே மற்றும் என்சிஎம்சி அட்டை மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு 20 சதவீதம் சலுகை வழங்குகிறது.பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக்தின் வாட்ஸ்அப் டிக்கெட் அமைப்பு (+91 83000 86000) மூலமாகவும் பேடி எம் மூலமாகவும் பயணிகள் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.பயணிகள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.