உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கன்டெய்னரில் இருந்து 922 கிலோ வெள்ளி கட்டிகள் திருட்டு; காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கோல்மால் நடந்ததா?

கன்டெய்னரில் இருந்து 922 கிலோ வெள்ளி கட்டிகள் திருட்டு; காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கோல்மால் நடந்ததா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவள்ளூர்: லண்டனில் இருந்து, சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திற்கு, இறக்குமதி செய்யப்பட்ட, 8.96 கோடி ரூபாய் மதிப்பிலான, 922 கிலோ வெள்ளி கட்டிகள் திருடு போனதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.காஞ்சிரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த தண்டலம், மண்ணுார் பகுதியில், 'பிரிங்க்ஸ் இண்டியா லிமிடெட்' நிறுவனம் செயல்படுகிறது. இது, வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்கிறது. இந்த நிறுவனத்திற்கு, லண்டனில் உள்ள எச்.எஸ்.பி.சி., வங்கி சார்பில், 'சீல்' வைத்த இரு கன்டெய்னர்களில், 39,000 கிலோ எடையில், 1,305 வெள்ளி கட்டிகள், இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன.அங்குள்ள, 'லண்டன் கேட்வே' துறைமுகத்தில் இருந்து, சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்திற்கு, கடந்த மாதம் 30ம் தேதி கப்பலில் வந்து சேர்ந்தது.கடந்த 3ம் தேதி, துறைமுகத்தின் வழக்கமான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறை முடித்து, காலை 8:30 மணிக்கு இரண்டு கன்டெய்னர்களும் சென்னைக்கு புறப்பட்டன.தண்டையார்பேட்டையைச் சேர்ந்த, 'டி.எஸ்.எஸ்., டிரான்ஸ்போர்ட்' நிறுவன லாரிகளில் வெள்ளிக்கட்டிகள் ஏற்றி, அதானி துறைமுகத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுாருக்கு எடுத்து செல்லப்பட்டன.காலை 11:30 மணிக்கு, ஸ்ரீபெரும்புதுார் கிடங்கிற்கு, கன்டெய்னர் லாரிகள் சென்றன. அங்குள்ள ஊழியர்கள், லாரிகளில் இருந்த கன்டெய்னர்களை ஆய்வு செய்தபோது, ஒரு கன்டெய்னரின், 'சீல்' உடைக்கப்பட்டு, புதிதாக சீல் வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.அந்த கன்டெய்னரை திறந்து பார்த்தபோது, 922 கிலோ எடையிலான 30 வெள்ளிக்கட்டிகள் குறைவாக இருப்பது தெரிந்தது. இவற்றின் மதிப்பு, 8.96 கோடி ரூபாய். இதையடுத்து, கன்டெய்னரின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த, 'டிராக்கிங் டிவைஸ்' ஆய்வு செய்யப்பட்டது.அதில், கடந்த 2ம் தேதி இரவு, கன்டெய்னர்கள் துறைமுகத்தில் இருக்கும்போது, வெள்ளிக் கட்டிகள் குறைவாக இருந்த கன்டெய்னர், 16 நிமிடங்கள் திறந்து மூடப்பட்டது தெரிந்தது.அச்சமயத்தில், வெள்ளிக் கட்டிகள் திருடப்பட்டிருப்பதாக, நிறுவன மேலாளர் தசாரி ஸ்ரீஹரி ராவ், 48, காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின்படி, காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து, அதானி துறைமுக வளாகத்தில் உள்ள, 'சிசிடிவி' கண்காணிப்பு பணியில் இருந்த காவலாளிகள், ஊழியர்களிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

M Ramachandran
ஏப் 08, 2025 10:21

இது நம் தமிழ் நாட்டில் தான் நடந்திருக்கு. நாடே நல்லாட்சின்னு பெருமைப்படுதாம்.


Tamil Inban
ஏப் 08, 2025 09:18

காட்டுப்பள்ளி “அதானி “ துறைமுகம்,


ஆரூர் ரங்
ஏப் 08, 2025 07:41

எறும்புகள் தின்றுவிட்டிருக்கும். கட்டப்பட்டிருந்த சாக்குப்பைகளை பெருச்சாளி சாப்பிட்டு ஏப்பம் விட்டிருக்கும். இது புகழ்பெற்ற கட்டுமர நாடு.


தம்பி
ஏப் 08, 2025 07:38

16 நிமிஷத்தில் 8.96 கோடி கொள்ளை. நல்ல உலகத்தரம் வாய்ந்த ரெக்கார்ட்.


அப்பாவி
ஏப் 08, 2025 07:34

நாடே நல்லாட்சின்னு பெருமைப்படுதாம்.


sridhar
ஏப் 08, 2025 06:40

நிச்சயமாக திமுக திருடர்கள் கிடையாது , அமௌன்ட் ரொம்ப குறைவு .


SUBBU,MADURAI
ஏப் 08, 2025 07:33

இது போன்ற சில்லறை திருட்டுகளில் எல்லாம் அவன்கள் ஆர்வம் காட்ட மாட்டான்கள்.


M R Radha
ஏப் 08, 2025 06:39

த்ரவிஷன்கள் கொள்ளையையே மிஞ்சும் பெருந்தொகை வேலையாக இருக்குமோ ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை