உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தோட்டத்தில் புகுந்த 13 அடி நீள ராட்சத முதலை!

தோட்டத்தில் புகுந்த 13 அடி நீள ராட்சத முதலை!

கடலூர்: சிதம்பரம் அருகே வீட்டு தோட்டத்தில் புகுந்த 13 அடி நீளமும் சுமார் 550 கிலோ எடை கொண்ட ராட்சத முதலையை மீட்ட வனத்துறையினர், அதனை பத்திரமாக ஏரியில் விட்டனர். சிதம்பரம் அருகே அம்மாபேட்டை தோப்பு தெரு கிராமத்தில் வசித்து வருபவர் சம்பந்தமூர்த்தி. இவரது வீட்டு தோட்டத்தில் ராட்சத முதலை ஒன்று பதுங்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.அதன் பேரில் அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், 13 அடி நீளமும் சுமார் 550 கிலோ எடை கொண்ட ராட்சத முதலையை பத்திரமாக பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வக்கிரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனர். வீட்டு தோட்டத்தில் இரவு நேரத்தில் திடீரென புகுந்த முதலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ