உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருகப்பெருமானுக்கு 180 அடி உயரத்தில் சிலை; மருதமலையில் அமைகிறது!

முருகப்பெருமானுக்கு 180 அடி உயரத்தில் சிலை; மருதமலையில் அமைகிறது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், 180 அடி உயரத்தில், ஆசியாவின் மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கப்படும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மாலை நேரில் ஆய்வு செய்தார். மருதமலை அடிவாரத்தில், 180 அடி உயர முருகன் சிலை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து, மாஸ்டர் திட்டத்தில், பார்க்கிங் அமைப்பதற்கான இடங்கள், லிப்ட் அமைக்கும் பணி, திருமண மண்டபம் அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, சுவாமி தரிசனம் செய்தார். ஆய்வின்போது, முதன்மை செயலாளர் சந்திரமோகன், கலெக்டர் கிராந்தி குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8tp7jiwi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில்,'தி.மு.க., ஆட்சியில், 90 முருகன் கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. பழனியில் அன்னை தமிழிலும் குடமுழுக்கு நடந்தது.60 வயது முதல் 70 வயதிலான மூத்த குடிமக்களை, அறுபடை வீடுகளுக்கு அரசு மானியத்தில், ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்வதில், இதுவரை, 1,622 பேர் பயனடைந்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில், ஏழு முருகன் கோவில்கள் பெருந்திட்ட வரைவிற்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 400 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழனி தண்டாயுதபாணி கோயிலில், முதல் பெருந்திட்ட வரையில், 99 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளும், இரண்டாம் பெருந்திட்ட வரைவில், 50 கோடி ரூபாய் மதிப்பில் நில ஆர்ஜிதம் செய்யும் பணியும், திருத்தணியில், 183 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது.மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், முதற்கட்டமாக, 6½ கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுடன், ஏப்ரல் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும். இரண்டாம் கட்டமாக, 11 கோடியில் திட்டப்பணிகளும், மூன்றாம் கட்டமாக, 23 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.அதேபோல், சிறுவாபுரி திருக்கோவிலில், 16 கோடி ரூபாயில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.திருச்சி, வயலூர் முருகன் கோவிலில், அடுத்த மாதம் 19ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.அங்கும், 30 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளது.ஊட்டி, காந்தல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 16 கோடியில் பெருந்திட்ட வரைவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஏழு முருகன் கோவில்களில் மட்டும், 872 கோடி ரூபாய் செலவில், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மருதமலையில் அமைக்கப்பட்டு வரும் லிப்ட் பணிகள், ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதத்தில் நிறைவடைந்து, பயன்பாட்டிற்குகொண்டு வரப்படும். மருதமலை அடிவாரத்தில், 180 அடி உயரத்தில், கல்லினாலான முருகன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வு இன்று மேற்கொள்ளப்பட்டது. சாத்தியக்கூறு உறுதி செய்யப்பட்டதும், ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்ட முருகன் சிலையை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்வோம். பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.வெள்ளிங்கிரி மலை ஏறும் பக்தர்களுக்கு, தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தாண்டு முதல் மலையேறும் பக்தர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், தமிழிலும் குடமுழுக்கு நடைபெறும்,'என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

RAMESH
பிப் 02, 2025 07:28

இப்ப ஜோதிகா என்ன செய்யுது.....ஒரு வேல் வைக்கும் செலவில் எத்தனை பள்ளி கூடம் கட்டலாம்...சேகர்பாபுவை கேட்க முடியுமா.. இல்லை ஊமை ஆகி விட்டதா சிவகுமார் மருமகள்


venugopal s
ஜன 28, 2025 13:25

இதை ஒத்துக் கொள்ளவே முடியாது, பாஜக மட்டுமே ஹிந்து பாதுகாவலர்கள், மற்றவர்கள் உரிமை கொண்டாட விட மாட்டோம்!


tamil makan bharatham
ஜன 28, 2025 12:20

திருப்பரங்குன்றம் முருகன் மலையை காக்க துப்பில்லை, திருச்செந்தூர் முருகன் கோவில் அருகே கடல் அரிப்பால் சேதமாவதை தடுக்க வக்கில்லை, புராதான கோவில் ஆகம விதிகளை மதிக்கும் அறிவில்லை, பல கோவில்களுக்கு 1 கால பூஜை செய்யக் கூட நிதி இல்லை அப்படியே நீ சிலை வச்சி கிழிக்க வேண்டாம் போங்க போய் 21 ம் பக்கம் வரலாறை படிங்க....


Gnanajothi
ஜன 28, 2025 10:56

முதலாவதாக நம்ம திருப்பரங்குன்றம் மலை காப்பாத்துங்க


Madras Madra
ஜன 28, 2025 10:36

சிலை வைப்பது மண்டபம் கட்டுவது சமாதி கட்டுவது இதெல்லாம் தான் வளர்ச்சி ன்னு புரிஞ்சி வச்சிருக்கானுங்க


Mohan
ஜன 28, 2025 10:05

திருப்பரங்குன்றத்தை காப்பாத்த துப்பில்லை, திருசெந்தூர் கடல் அரிப்பு அது என்னனு பாக்க முடியாது ஏன்னா அந்தளவுக்கு அறிவு கிடையாது ..ஆனா எதற்கெடுத்தாலும் சிலை என்ன ஒரு மன நோய் போல இருக்குது இந்த கூட்டத்துக்கு.. அங்க போற மக்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்தி கொடுத்தாலே போதும் வேற ஒன்னும் கிழிக்க வேண்டாம் ..அத யாரு மைண்டைன் பண்றது


பேசும் தமிழன்
ஜன 28, 2025 08:25

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருப்பரங்குன்றம் முருகன் மலையை.. சிக்கந்தர் மலை என்று பெயரை மாற்றி ஆட்டய போட ஒரு கும்பல் முயற்சி செய்து வருகிறது.. அதை தடுக்க துப்பில்லை. வந்துட்டார்.... சிலை வைக்கிறேன் பேர்வழி என்று !!!


Padmanaban Arumugam
ஜன 28, 2025 08:13

ஒர்ஸ்ட் திங்கிங்


T.sthivinayagam
ஜன 28, 2025 07:15

ஹிந்துக்கள் வரவேற்க்கவேண்டிய மகிழ்ச்சியான தகவல்


Raj
ஜன 28, 2025 06:42

இவர்கள் ஆட்சி காலத்தில் இனி தமிழகத்தில் சிலைகள் இருக்கும், மக்கள் எல்லாம் விலைவாசி உயர்வால் மடிந்துவிடவேண்டியது தான். இருக்கும் சிலையில் இருந்து மக்களுக்கு அருள் கிடைத்தால் போதும். கோவையில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது அதை தீர்க்கமால் 180 அடி சிலையினால் மக்களுக்கு என்ன பயன்? கோவையின் விமானநிலையத்தை விஸ்தரிக்க முடியவில்லை எந்த ஆட்சியிலும். பன்னாட்டு விமான நிலையமாம் கேவலம்.


புதிய வீடியோ