மயிலாடுதுறை ரயிலுக்கு மாற்றத்தில் ஒரு மாற்றம்
வடமதுரை: செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளப் பராமரிப்பு பணிகளால் இன்று (அக்.,8) துவங்கி அக்.,29 வரை இடையில் அக்.,9, 23 தவிர மற்ற நாட்களில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியே திருச்சிக்கு திருப்பி விடப்படும் என ரயில்வே ஏற்கனவே அறிவித்தது.இந்நிலையில் ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு சிறிய மாற்றமாக வழித்தட மாற்றத்தை ரத்து செய்துள்ளது. அதன்படி அக். 9, 11, 12,16, 23, 30, 31 ல் மட்டும் மதுரை, திண்டுக்கல், வடமதுரை வழியே வழக்கமான வழித்தடத்தில் செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் இயக்கப்படுகிறது.