உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு திராவிட கட்சி காலி ஆகிவிடும்; அடித்துச் சொல்கிறார் அண்ணாமலை

ஒரு திராவிட கட்சி காலி ஆகிவிடும்; அடித்துச் சொல்கிறார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:தமிழகத்தில் இருக்கும் திராவிட கட்சிகளில் ஒன்றின் ஓட்டு சதவீதம், வரும் சட்டசபை தேர்தலில் 12 சதவீதத்துக்கும் கீழே சரியும். இது அந்த கட்சியின் வீழ்ச்சியில் முடியும் என்று பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது:இந்த உலகத்தில் கடந்த மூன்று மாதங்களில் முக்கியமான இரண்டு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தி.மு.க.,வில் உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இது ஒரு தலைமுறை மாற்றம். நடிகர் விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறார். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளால் தமிழக அரசியல் முழுமையாக மாற்றம் பெறும்.கூட்டணி ஆட்சி, கூட்டணி மாற்றம் என மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உதயநிதி பதவியேற்றது என்பது நாங்கள் செய்வது குடும்ப அரசியல்தான் என்பதை எந்தவித கூச்சமும் இன்றி தெள்ளத் தெளிவாக அவர்கள் காட்டி இருக்கின்றனர். ஸ்டாலின் பதவிக்கு வந்ததற்கும், உதயநிதி பதவிக்கு வந்ததற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.அரசியலுக்கு வரமாட்டேன் என்ற உதயநிதி அரசியலுக்கு வந்தார்; வேகமாக எம்.எல்.ஏ., ஆனார், அதே வேகத்தில் அமைச்சருமானார்; இன்னும் வேகமாக துணை முதல்வரும் ஆகியிருக்கிறார். ஒருவரை உயர்த்துவதற்காக ஒரு கட்சியே வேலை செய்வது என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.பதவி பெறுவதற்கு ஒருவர் பத்து ஆண்டுகள், 20 ஆண்டுகள் களத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்பதை உதயநிதியின் பதவி உயர்வு உடைக்கிறது.உதயநிதி தனித்திறமையால் தான் தி.மு.க., எம்.எல்.ஏ., ஆனார் என்பதை நான் ஏற்க மாட்டேன். அந்த தொகுதியில் தி.மு.க., சார்பில் யார் என்றாலும் ஜெயிப்பார்கள்.சர்வதேச செஸ் ஒலிம்பியாட் நடத்துவதோ, ஃபார்முலா கார் பந்தயம் நடத்துவது அவரது சாதனை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. விஜய் அரசியலுக்கு வந்ததை நான் வரவேற்கிறேன். ஒரு மாஸ் நடிகர், தன் துறையில் உச்சத்தில் இருப்பவர் வந்திருக்கிறார்; அவரை வாழ்த்தி வரவேற்க வேண்டும். இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.நிறைய பேர் வரும்போதுதான் தற்போதுள்ள நிலை உடையும். அரசியல்வாதியாக பா.ஜ., கட்சியை பார்க்கும்போது விஜயின் மனநிலை மாற வாய்ப்பு உள்ளது.தமிழக அரசியலில் பா.ஜ., வுக்கான காலம் உருவாகிக் கொண்டிருக்கிறது. விஜய் வரட்டும். நிறைய ஓட்டு பிரியட்டும்.எனக்கும் சீமானுக்கும் பல விஷயங்களில் நிறைய கருத்து வேறுபாடு உள்ளது. இருவருக்கும் அடிப்படை எண்ணம் தமிழ்நாடு அரசியல் மாற வேண்டும் என்பதுதான். விஜய் கட்சியின் பின்னணியில் பா.ஜ, தான் இருக்கிறது என்று தி.மு.க.,வினர் கூறுவதை ஏற்க மாட்டேன். எங்களுக்கு வேறு வேலை இல்லையா? அவர் சுயமாக யோசித்து அரசியலுக்கு வருவதற்கு பா.ஜ., தான் காரணமா?உதயநிதிக்கு இத்தனை தலைவர்கள் கூஜா தூக்கும்போதே மக்கள் புரிந்து கொள்வார்கள்; இது ஜனநாயக முறையிலான கட்சி இல்லை என்று தெரிந்து கொள்வர். விஜயும் நாங்களும் வேறு வேறு பாதைகளில் சென்று கொண்டிருக்கிறோம்; இரண்டும் வித்தியாசமான பாதை. சீமானும் அதே போல தான். கூட்டணிக்கு வாய்ப்பில்லை.தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த சித்தாந்தங்கள் காலாவதி ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை தேர்தல்கள் பறைசாற்றுகின்றன. தமிழகத்தில் 2026 என்பது கூட்டணி ஆட்சி தான். ஒரு திராவிட கட்சி ஓட்டு சதவீதம் 12க்கு கீழே குறைய வாய்ப்புள்ளது. அதன் தொண்டர்கள் எல்லோரும் வெளியே வருவர். அது காலத்தின் கட்டாயம். அது எந்த கட்சி என்பது உங்கள் யூகத்துக்கு விட்டு விடுகிறேன். வரும் 2026 தேர்தலில் இந்த சரிவு ஆரம்பமாகும்; 2031ல் தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு வேலை இருக்காது.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

MADHAVAN
நவ 07, 2024 12:45

இப்படி அடுத்தவர்களின் அழிவு அடுத்தவர்களின் அழிவு என்று சொல்லி நீ அழிஞ்சுபோனதை மறந்துட்டிகளே


ameen
நவ 06, 2024 09:28

அவர் சொல்வது அதிமுகவைதான்....பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளின் கதி இப்படிதான் இருக்கும்....


kiruba haran
நவ 05, 2024 05:30

Hai


kiruba haran
நவ 05, 2024 05:28

பிஜேபி க்கு எதிரி என்றால் ஆன்டி | இந்தியன், திமுகவுக்கு எதிரி என்றால் பிஜேபி பி டீம் இது தோல்வி பயத்தால் வருவது,


K.n. Dhasarathan
நவ 02, 2024 21:11

என்ன அண்ணாமலை கடந்த தேர்தலில் கூட இரண்டு திராவிட கட்சிகளும் காணாமல் போகும் என்று ஜோஸ்யம் சொன்னீர்கள், சும்மா எல்லோரும் ஜோஸ்யம் சொல்ல முடியாது கண்ணா அதற்கும் படிக்கணும்,


R. John
நவ 01, 2024 21:34

ஒரு சினிமா நடிகருக்கு கூட்டம் கூடுவதை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வர இயலாது நடிகர்கள் அனைவரும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது


Ramaswami Sampath
நவ 01, 2024 18:06

எது எப்படி ஆனாலும் 2026 தேர்தலில் மக்கள் தாமரைக்கு 4 ஆம் முறை மரண அடி கொடுத்து அனுப்புவார்கள்.


S.L.Narasimman
நவ 01, 2024 12:33

விஜெய் கட்சி ஆரம்பித்ததால் இளைஞர்களின் திமுகா எதிர்ப்பு ஓட்டு அவருக்கு ஆதரவாக திரும்புவதால் தமிழ்நாட்டில் ஒரு கட்சியின் ஓட்டு மீண்டும் 3 அல்லது 4%க்கு திரும்பி சட்டசபை தேர்தலில் காணாமல் போய்விடபோகிறது.


saravanan
அக் 31, 2024 11:51

அடுத்தவர்கள் காணாமல் போவதாலோ, புதியவர்கள் வருவதாலோ அரசியலில் சமன்பாடுகள் மாறலாம் அதனால் ஆதாயம் அடையப்போவது நாம்தான் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் கிடையாது நமக்கு ஏற்றுக் கொண்ட கொள்கை, கோட்பாடுகள் முக்கியம். லட்சிய வேட்கையும், சமதர்ம சமன்பாடுகளும் மிக முக்கியம். பாஜக பெறும் வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாமல் சேற்றை அள்ளி வீசும் எதிர்கட்சிகள் சில. இட்டுக்கட்டி பொய் பிரச்சாரம் செய்யும் அமைப்புகள் பல. இவற்றையெல்லாம் முறியடிக்க வேண்டிய கடமை மாநில தலைமைக்கு உள்ளது. குறிப்பாக மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ஊழலற்ற நிர்வாகம், மக்கள் நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் போன்றவற்றை மக்கள் மன்றத்தில் விளக்குவது ஆகியவற்றால் தான் பாஜக வளரும் வகுப்பில் முதல் மாணவனாக வர வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட மாணவன் தன்னை அதற்கு தகுதி உடையவனாக வளர்த்துக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டு தனக்கான அளவு கோலை நிர்ணயிக்க கூடாது


Mani . V
அக் 31, 2024 08:15

இது வேற குறுக்கையும், மேற்க்கையும் போய்க்கிட்டு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை