வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அப்போ ஆந்திராவில் இருப்பவர்கள் மக்கள் இல்லையா ?
தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்தது போதும் புயல் ஆந்திராவை நோக்கி கடந்து சென்று மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் கடவுள் காப்பாற்ற வேண்டும்
சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்தது. புதுச்சேரிக்கும்-நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை (அக்.,17) கரையை கடக்கும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kpauc9fx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் நகர்ந்து செல்கிறது. முன்னதாக, 12 கி.மீ., வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது 15 கி.மீ., ஆக அதிகரித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம், புதுச்சேரிக்கும்-நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை (அக்.,17) கரையை கடக்கும். புயல் சின்னத்தை தொடர்ந்து, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 42 இடங்களில் கனமழை பதிவாகி இருக்கிறது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அப்போ ஆந்திராவில் இருப்பவர்கள் மக்கள் இல்லையா ?
தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்தது போதும் புயல் ஆந்திராவை நோக்கி கடந்து சென்று மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் கடவுள் காப்பாற்ற வேண்டும்