சில வரி செய்தி
தமிழக அரசு சார்பில், அடுத்த மாதம் 2025 - 26ம் ஆண்டுக்கான வரவு - செலவு பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண் பட்ஜெட் தொடர்பாக, விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. டெல்டா மற்றும் சுற்றியுள்ள எட்டு மாவட்டங்களுக்கான கருத்து கேட்பு கூட்டம், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இன்று நடக்கிறது. அமைச்சர் பன்னீர்செல்வம், வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கருத்துகளை கேட்க உள்ளனர்.