சில வரி செய்திகள்
தமிழகத்தில், அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை வரன்முறை செய்யும் திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது. கடந்த, 2016 அக்., 20க்கு முன்பதிவு செய்யப்பட்ட மனைகளை வரன்முறைப்படுத்த, இதில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அங்கீகாரமில்லாத வீட்டுமனைகள், வரன்முறைக்கான கால அவகாசம் முடிந்த நிலையில், மீண்டும் வாய்ப்பு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, 2027 ஜூன் 30 வரை, மனை வரன்முறைக்கு விண்ணப்பிக்கலாம்.