மேலும் செய்திகள்
அரசியல் நடிகர் விஜய்: பா.ஜ., விமர்சனம்
24-Aug-2025
திருவாரூரில் பிரசாரம் செய்த தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய், 'கூடும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என விமர்சனம் செய்கின்றனர். மக்களே உங்களைப் பார்த்து கேட்கிறேன். நீங்கள் ஓட்டு போட மாட்டீர்களா?' என கேட்டுள்ளார். அது அவருடைய உரிமை. ஆனால், கூடும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என்பதை நடிகர் விஜய் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு கூடிய கூட்டமெல்லாம் ஓட்டாக மாறவில்லை. அதாவது நானே உதாரணம். கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது என்பது பொதுவான விமர்சனம் தான். யாராக இருந்தாலும், நல்ல பாதையில் செல்ல வேண்டும்; தைரியமாக முன்னேற வேண்டும்; மக்களுக்காக பணியாற்ற வேண்டும். நடிகர் விஜய்க்கும் இது தான் என் வேண்டுகோள். - கமல், தலைவர், மக்கள் நீதி மய்யம்
24-Aug-2025