வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Kelambitayya kelambitaaayaaaaaa
புதுடில்லி: வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g4pwr6hz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தெற்கு மியான்மர் கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரண மாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 48 மணி நேரத்தில் மியான்மர்- வங்கதேச கடற்கரையில் வடக்கு, வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வரும் 7ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு, வரும் 5ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
Kelambitayya kelambitaaayaaaaaa