உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி; இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி; இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்று (நவ,08) 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அடுத்து இரண்டு நாட்களில் மேற்கு திசையில், தமிழக - இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ad0xlwmo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று(நவ.,08) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை (நவ.,09) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.,10ம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் நவ., 12,13ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்தமிழ கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வடதமிழகத்தை ஒட்டிய கடலோரப்பகுதிகள், தென்தமிழ கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை (நவ.,09) சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Palanivel பழனி முருகன்
நவ 09, 2024 19:33

மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி...


Palanivel பழனி முருகன்
நவ 09, 2024 19:32

மிகவும் பயனுள்ள தகவல்கள்


D.PARTHASARATHI
நவ 08, 2024 19:41

நண்பர்களே இந்த வருடம் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யாது என்பதே என் கருத்து . ஏனெனில் தென்மேற்கு பருவ மழை அதிகமாக பொழிகின்ற வருடங்களில் வடகிழக்கு பருவ மழை மிக குறைவாகவே பெய்யும். இந்த நிகழ்வு காலம் காலமாக நடந்து வருகிறது.


MARI KUMAR
நவ 08, 2024 18:32

வானிலை அறிக்கை...தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது


முக்கிய வீடியோ