உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு!

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு!

சென்னை: வங்கக் கடல் பகுதியில் இன்று (மே 27) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k20pp0s8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இன்று (மே 27) மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி , திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை