உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெறுத்துப் போச்சு சார்...! பேட்டரி பைக்கை தீ வைத்து கொளுத்திய நபரால் பரபரப்பு

வெறுத்துப் போச்சு சார்...! பேட்டரி பைக்கை தீ வைத்து கொளுத்திய நபரால் பரபரப்பு

சென்னை: சென்னையில் ஷோரூம் முன் பேட்டரி பைக்கை தீவைத்து கொளுத்திய நபரால் பரபரப்பு நிலவியது. திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் அம்பத்தூரில் உள்ள பேட்டரி பைக் ஷோ ரூமில் ரூ.1.80 லட்சம் மதிப்பிலான பைக்கை வாங்கியுள்ளார். பைக் வாங்கியது முதல் தற்போது வரை தொடர்ந்து பிரச்னை இருந்து வருவதாகவும், இது தொடர்பாக ஷோ ரூமில் புகார் கொடுத்தால், அலட்சியமாக பதில் அளித்து, பிரச்னைக்கு தீர்வு காணாமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஒருகட்டத்தில் அதிருப்தியடைந்த பார்த்தசாரதி, ஷோ ரூம் முன்பு தனது பைக்கை தீவைத்து கொளுத்தியுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அவரிடம் ஷோ ரூம் ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'இவ்வளவு நாள் புகார் சொல்லியும், பிரச்னைக்கு தீர்வு காணாமல், அலட்சியமாக பதில் சொல்லுகிறார்கள். உங்களின் சிஸ்டமே தப்பு. வெறுத்துப் போச்சு சார். எனக்கு பிரச்னைக்கு தீர்வே வேண்டாம்,' என்று ரொம்பவும் நொந்து போய் பேசினார். இதையடுத்து, தகவல் அறிந்து வந்த போலீசார் பார்த்தசாரதியை சமாதானப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sathyanarayanan Sathyasekaren
டிச 01, 2024 04:55

வாய்மையே பேசும் என்று பெயரில் பொய்யை எழுதாதீர். உன்னுடைய நண்பர்கள் மூவர் பேட்டரி வாகனம் தான் வைத்துள்ளனர். 3 வருடங்களாக நன்றாக தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. யாரோ ஒருவருடைய ஒரு கம்பெனியின் வண்டி சரில்லை என்பதற்காக அணைத்து வண்டிகளும் அப்படி என்று சொல்லாதீர்கள்.


சம்பா
நவ 29, 2024 15:50

மாண ஸ்தன்


Arunkumar J
நவ 29, 2024 13:50

இப்படி நினைத்து ஏமாறாதீர்கள் ஐயா ... எலக்ட்ரிக் வண்டிகள் சிறப்பாகவே செயல்படுகின்றன.. ஏதோ ஒன்று ஏதோ ஒரு பிரச்சனையால் இப்படி இருந்துயிருக்கலாம் ... நானும் ஒரு 3 வருடங்களாக எலக்ட்ரிக் வண்டிகளை தான் பயன்படுத்துகிறேன் .. நல்லாவே லாபமா இருக்கு.


kantharvan
நவ 29, 2024 15:00

ஆகான்


hari
நவ 29, 2024 12:05

looks like ather


R Dhasarathan
நவ 29, 2024 09:52

ஐம்பதாயிரத்திற்கு நல்ல பேட்டரி வண்டி கிடைக்கும் போது எதற்கு 1.80 லட்சம்.... பிராண்ட் என்பது ஒரு போதை.... மக்கள் தான் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.


W W
நவ 29, 2024 09:38

பேட்டரி வாகனம் எந்த ப்ரண்ட் என்று தெரிந்தால் நாங்களும் அலர்ட் ஆக இருக்கலாம் சார்


வாய்மையே வெல்லும்
நவ 29, 2024 08:45

இனிமே மின்கலம் இரண்டுசக்கர வண்டிகள் வாங்கினால் நமக்கு ஏழரை இலவசம் என மேடையிட்டு கூறிய பார்த்தன் மிக நல்லவன் அவனுக்கு நேர்ந்த மின்கல விசைப்பொறி இரண்டுசக்கர வாகன மோசடி யாருக்கும் வரக்கூடாது .