உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமும் ஒரு குப்பை மலை உருவாகும்; எதிர்கால சென்னைக்கு காத்திருக்கும் இமாலய சவால்!

தினமும் ஒரு குப்பை மலை உருவாகும்; எதிர்கால சென்னைக்கு காத்திருக்கும் இமாலய சவால்!

சென்னை: சென்னையில் இப்போது உற்பத்தியாகும் குப்பையை போல், மும்மடங்கு குப்பை, 2051ம் ஆண்டில் உற்பத்தியாகும்; அதை சமாளிப்பது, எதிர்கால சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு இமாலய சவாலாக இருக்கும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.சென்னை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், குப்பை மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. தொழில் நிறுவனங்கள், வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், ஏராளமான பேர் இங்கு குடியேறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் விளைவாக, தினசரி உற்பத்தியாக கூடிய குப்பையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இது மாநகராட்சி அதிகாரிகளுக்கு தலைவலியாக இருக்கிறது.குப்பை உற்பத்தி அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருப்பது, மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நுகர்வுத்தன்மை தான். வீடுகளில் சமையல் செய்து மட்டுமே உண்ட காலம் மாறி, உணவகங்களில் பார்சல் வாங்கி வந்து சாப்பிடுவது அதிகரித்துள்ளது. இதுவும் குப்பை பெருக முக்கிய காரணம் என்கின்றனர், அதிகாரிகள். மாநகரில் உருவாகும் குப்பையை தூய்மை பணியாளர்கள் அகற்றுகின்றனர். மக்கும், மக்காத இரு வகைகளாக பிரிக்கப்பட்டு குப்பை கிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மாநகராட்சியின் பெருங்குடி, கொடுங்கையூர் கிடங்குகளில் பயோ மைனிங் முறையில் குப்பைகள் அழிக்கப்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர பொது இடங்கள், நீர்நிலைகள் அருகே கட்டிட கழிவுகள் கொட்டினால் ரூ.500 முதல் ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது. தற்போது, சென்னை​ மாநகராட்சி தினமும் 5,900 டன் கழிவுகளை அகற்றுகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் குப்பை கழிவு உற்பத்தி மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும்.வரும் 2051 ஆண்டில் சென்னையில் தினசரி உற்பத்தியாக கூடிய குப்பை 17,422 டன்னாக உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி மேலும் விரிவுபடுத்தப்படும் பட்சத்தில், உற்பத்தியாகும் குப்பையும் அதற்கு தகுந்தபடி அதிகரிக்கும். பெருநகரங்களில், மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை அகற்றுவது முக்கிய பிரச்னையாக உள்ளது. அது மட்டுமின்றி, திறந்தவெளி, ஏரி, குளங்களில் குப்பை கொட்டுவதும் அதிகரிக்கிறது. குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் தயார் செய்யப்பட்ட ஆய்வறிக்கையில், மறுசுழற்சி அல்லது வளம் மீட்பு மையங்களை விரிவுபடுத்துதல், மைக்ரோ கம்போஸ்டிங் மையங்களை ஏற்படுத்துதல், பயோ சி.என்.ஜி., எனப்படும் உயிரி எரிபொருள் உற்பத்தி மையங்களை ஏற்படுத்துதல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இவற்றை செயல்படுத்த, குப்பைகளை வாங்கும் இடத்திலேயே 100 சதவீதம் தரம் பிரித்து வாங்க வேண்டும்; அதற்கு தகுந்த விழிப்புணர்வும், கண்டிப்பான அமலாக்கமும், கண்காணிப்பும் அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 20 ஆண்டுகளில் சென்னையில் மக்கள் தொகையும் அதிகரிக்கும்; மிச்சம் மீதியுள்ள காலியிடங்களும் வீடுகளாகி விடும் சூழலில், குப்பை பிரச்னைக்கு கண்ணுக்கெட்டிய துாரம் வரை தீர்வுகள் தென்படவில்லை. கடந்தாண்டு சென்னையில் பெய்த மழையானது, திடக்கழிவு மேலாண்மையில் இருந்த குளறுபடிகளை அம்பலப்படுத்தியது. பல இடங்களில் மழைநீர் வடிகால்களில் குப்பைகள் அடைத்துக் கொண்டன. அவற்றை அகற்றுவதற்கு பெரும்பாடு பட வேண்டிய நிலை ஏற்பட்டது.இத்தகைய நிலையில், 2051ம் ஆண்டு உருவாகப்போகும் குப்பை, இப்போது இருப்பதைப்போல மும்முடங்காக இருக்கும் என்பதை, நிலைத்தாலே மலைப்பாக இருக்கிறது.தினமும் ஒரு மலை போன்ற குப்பையை அழிப்பது என்பது, மாநகராட்சியை நிர்வாகம் செய்வோருக்கு இமாலய சவாலாக இருக்கும் என்கின்றனர், துறை வல்லுநர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Bhaskaran
ஜன 14, 2025 15:31

காசு தந்தால் போதும் மாநகராட்சி எதுவும் கண்டு கொள்ளாது அதிகாரிகள் ஊழியர்கள் ஒரேமாதிரிதான்


K V Ramadoss
ஜன 14, 2025 00:58

ஒவ்வொரு வீட்டிற்கும் கார்பொரேஷன் 2 குப்பை டிரம்களை சாம்பலை செய்ய வேண்டும். அதற்கான விலையை சொத்து வரி வாங்கும்போது சேர்த்தது வாங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்காரர்களிடமும் அந்த டிரம்களில் அழுகும் குப்பை, அலுக்காத குப்பை என்று கண்டிப்பாக பிரித்து போட சொல்ல வேண்டும்.அழுகும் குப்பைகளை உரமாக மாற்ற ஒதுக்குப்புறமான தனியான இடத்தில் ஏற்பாடு செய்யவேண்டும். அழுகாத குப்பபைகளை தள்ளி வேறு ஒரு இடத்தில், எரித்து தாருடன் கலந்து, ரோட் போட உபயோகிக்கவேண்டும்.


தாமரை மலர்கிறது
ஜன 13, 2025 21:27

தமிழகத்தில் மக்களின் வாங்கும் சக்தி மிகவும் அதிகரித்துள்ளதால், அதிகஅளவு குப்பை குவிகிறது. கடலிலும் கொட்டமுடியாது . கடல்வாழ் பிராணிகள் பாதிக்கப்படும். நிலத்திலும் வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரே தீர்வு வளர்ந்துள்ள தென் மாநிலங்களின் வரியை பத்து சதவீதம் உடனடியாக உயர்த்தவேண்டும். இல்லையெனில் கலிபோர்னியா மாதிரி இன்னும் புத்தாண்டில் தமிழகம் பற்றி எரியும் . உலகிலேயே மிகவும் குறைவான வரி கொண்ட அரசு இந்தியா தான். அனைத்துப்பொருள்களுக்கும் உடனடியாக ஒரே வரியாக முப்பது சதவீதம் வரியை போடவேண்டும்.


Ravi Kumar
ஜன 13, 2025 18:58

உண்மை .


sridhar
ஜன 13, 2025 17:34

எல்லாத்தையும் கொண்டு சி ரஞ்சன் சாலையில் கொட்டுங்க , குப்பையோடு குப்பையா இருக்கட்டும்.


Sampath
ஜன 13, 2025 17:29

ஒரு பாட்டில் சாராயம் போதும். தொலை நோக்கு பார்வையாவது மண்ணாவது DMK


Kundalakesi
ஜன 13, 2025 16:42

தொலைநோக்கு பார்வை இல்லாத நபர்களிடம் ஆட்சி அதிகாரம் ஒப்படைத்த மக்கள் இதையெல்லாம் தான் தங்கள் வாரிசுகளுக்கு விட்டுச்செல்ல வேண்டும்.


karthik
ஜன 14, 2025 16:23

சபாஷ், மிக சரியான பதிவு. வளரும் குழந்தைகளின், இலைகர்களின் எதிர்காலத்தை நினைத்தாவது தமிழ்நாடு மக்கள் முழிச்சிக்கணும் - ட்ராவிடியா அரசியலை தூக்கி போட்டு, மாற்று அரசியலுக்கு வழிசெய்து கொடுக்கணும்.


Kasimani Baskaran
ஜன 13, 2025 15:21

திராவிட இமாலய சாதனையில் முக்கியமானது கூவம். அதிலும் முதலை விட்டு இன்றைய அளவில் பல லட்சம் கோடியை அபேஸ் செய்தவர் முத்தமிழ் வித்தகர்தான் என்றால் அது மிகையாகாது. அது அன்றோடு முடியவில்லை - இன்னும் வேறு குப்பை வடிவங்களில் தொடர்கிறது.


theruvasagan
ஜன 13, 2025 15:14

60 வருடமா சேர்த்து வச்ச குப்பைகளை அப்புறப்படுத்தற வழியைக் காணோம். அதை செஞ்சுட்டா மீதி வேலை சுலபமாகிவிடும்.


Anantharaman Srinivasan
ஜன 13, 2025 14:59

அதிமுக ஆட்சியில் பிளாஸ்டிக் கவர்கள் உபயோகம் 75% தடைசெய்யப்பட்டிருந்தது. திமுக விடியல் ஆட்சியில் கண்டு கொள்வதேயில்லை. எங்கு பார்த்தாலும் பரந்து கிடக்கிறது. தெருவில் குப்பையெடுக்கும் துப்புறவு தொழிலாளர்கள் நான்கு மணிநேரந்தான் வேலை செய்கின்றனர். பிறகு தனிப்பட்ட Flats / பங்களாக்களில் குப்பை அள்ளுதல், சாக்கடை அடைப்பு, தோட்டவேலை போன்ற Private job.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை