உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சிறுதானிய சாகுபடிக்கு தனி மவுசு

 சிறுதானிய சாகுபடிக்கு தனி மவுசு

கரூர்: தமிழகத்தில் சிறுதானிய சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில், அரிசி, கோதுமை மட்டுமே முக்கிய உணவு பொருட்களாக உள்ளன. இதில், பெரும்பாலும் மாவுச்சத்துகளே உள்ளன. புரதம், நார்ச்சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் இல்லாததால், மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பல நோய்களுக்கும் உள்ளாகின்றனர். இதை தடுக்கவும், சிறுதானியங்களை உணவுப்பழக்கத்தில் அதிகம் பயன்படுத்தவும், 2023ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக, ஐ.நா., அறிவித்தது. அன்று முதல் சிறுதானிய சாகுபடியில் இந்தியா அதிக கவனம் செலுத்த தொடங்கியதால், சிறுதானிய சாகுபடிக்கு தமிழகத்தில் தனி மவுசு கிடைத்துள்ளது. இதில், 2021 - 22ம் ஆண்டுடன், 2025 - 26ம் ஆண்டை ஒப்பிடுகையில், 52,105 ஏக்கர் அதிகரித்துள்ளது. இதில், மக்காச்சோளம், 55.32 சதவீதம், சோளம், 33.25 சதவீதம், கேழ்வரகு, 6.67 சதவீதம், கம்பு, 2.86 சதவீதம், சாமை, வரகு, தினை, 1.90 சதவீதம் என, பயிரிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி