உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமும் ஒரு சாஸ்தா:தமிழக ஐயப்பன் கோயில்கள்-27

தினமும் ஒரு சாஸ்தா:தமிழக ஐயப்பன் கோயில்கள்-27

ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.

தொழில் சிறக்க...

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்து உள்ளது மூக்காரெட்டிப்பட்டி. இங்கு வனப்பகுதியையொட்டி தோட்டிக்கல் என்ற இடத்தில் தர்மசாஸ்தா கோயில் உள்ளது. சபரிமலையைப்போல் இங்கும் 18 படிகள் உள்ளன. கிழக்கு நோக்கி இருக்கும் தர்மசாஸ்தாவை வணங்கினால் தொழில் சிறக்கும். உடல்நலத்துடன் வாழலாம். வேண்டுதல் நிறைவேறியதும் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். கார்த்திகை 1ல் படி பூஜை, கொடியேற்றம் செய்யப்பட்டு மண்டல பூஜை சிறப்பாக நடக்கும். தமிழ் மாதப்பிறப்பும் இங்கு விசேஷம். * பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 15 கி.மீ., * அரூரில் இருந்து 16 கி.மீ.,நேரம்: அதிகாலை 5:00 - 7:00 மணி மாலை 6:00 - 8:00 மணி தொடர்புக்கு: 99420 88727, 98429 08059அருகிலுள்ள தலம்: தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர்37 கி.மீ., நேரம்: காலை 6:00 - 11:00 மணி மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 04346 - 253 599


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை