மேலும் செய்திகள்
தினமும் ஒரு சாஸ்தா:தமிழக ஐயப்பன் கோயில்கள்-5
20-Nov-2024
ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.சனிதோஷமா...
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ளார் காடந்தேத்தி அய்யனார். இவரை வழிபட்டால் ஏழரை, அஷ்டமச்சனியால் ஏற்படும் தோஷம் தீரும். தேவர்களுக்கு தொல்லை கொடுத்தான் அசுரனான காடன். அவர்கள் அய்யனாரை சரணடைய சாட்டையைச் சுழற்றி காடனை அடித்தார். வலி தாங்க முடியாமல் மனம் திருந்தி இத்தலத்திற்கு வந்தான் காடன். இதனால் இந்த ஊருக்கு 'காடன் திருந்தி' என்ற பெயர் வந்தது. இதுவே காடந்தேத்தி என அழைக்கப்படுகிறது. சத்யபூரணர் எனும் மகரிஷி கோயில் கட்டி அருகிலேயே தீர்த்தம் ஒன்றையும் உருவாக்கினார். இதில் நீராடினால் தானம் செய்த புண்ணிய பலனைப் பெறலாம். பூர்ணா, புஷ்கலாவுடன் காட்சி தரும் அய்யனாருக்கு தொடர்ந்து ஏழு சனிக்கிழமையில் எள் தீபம் ஏற்றினால் சனிதோஷம் தீரும். புரட்டாசி ஞாயிறன்று அய்யனாருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. * திருத்துறைப்பூண்டியில் இருந்து 15 கி.மீ., * நாகப்பட்டினத்தில் இருந்து 26 கி.மீ., நேரம்: காலை 9:30 - மாலை 6:00 மணி தொடர்புக்கு: 97867 93576, 99430 75706அருகிலுள்ள தலம்: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் 16 கி.மீ., நேரம்: காலை 6:00 - 11:00 மணி மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 99442 23644, 78717 80044
20-Nov-2024