மேலும் செய்திகள்
தினம் ஒரு சாஸ்தா: தமிழக ஐயப்பன் கோயில்கள் -03
18-Nov-2024
ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.வெற்றிக்கு...
சேலம் மாவட்டம் ஆத்துார் உப்பு ஓடைக்கரையில் சாட்டை ஏந்திய அய்யனார் கோயில் உள்ளது. இவரை வழிபட்டால் தடை நீங்கி வெற்றி கிடைக்கும். பழமையான இக்கோயிலில் பூர்ணா தாமரை மலரையும், புஷ்கலா அல்லி மலரையும் ஏந்தியபடி உள்ளனர். ஆடித்திருவிழாவின் போது சக்தி கரகம் அழைத்து வரப்பட்டு நள்ளிரவு பூஜையும், மறுநாளன்று பொங்கல், தேர்த்திருவிழா நடக்கும். அப்போது மேளம், தாளம் இசைப்பதோ, பெண்கள் பங்கேற்பதோ கூடாது. இக்கோயிலின் காவல் தெய்வங்களான கருப்பண்ணாரும், அய்யனாரும் ஊரைக் காக்க தினமும் குதிரை மீதேறி வலம் வருகின்றனர். சைவ படையலை ஏற்கும் அய்யனாருக்கு கருப்பு ஆடை சாத்தக் கூடாது. திருமணத்தடை நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும், திருட்டு போன பொருள் கிடைக்கவும், விவசாயம் செழிக்கவும் விளக்கேற்றுகின்றனர். பல்லி சப்தமிடுவதை சுவாமியின் உத்தரவாக கருதி முயற்சியை தொடங்குகின்றனர். ஆத்துார் புதுபஸ் ஸ்டாண்டில் இருந்து புறவழிச்சாலை வழியாக உப்பு ஓடை, விதைப் பண்ணைக்கு செல்லும் சாலையில் 2 கி.மீ.,நேரம்: காலை 9:00 - 11:00 மணிதொடர்புக்கு: 97892 96669அருகிலுள்ள தலம்: ஆத்துார் காயநிர்மலேஸ்வரர் கோயில் நேரம்: காலை 7:00 - 11:30 மணிமாலை 5:00 - 8:00 மணி
18-Nov-2024