உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  விஜய் நிகழ்ச்சிக்காக அமைத்த ஷெட் துாண் சரிந்து பரபரப்பு

 விஜய் நிகழ்ச்சிக்காக அமைத்த ஷெட் துாண் சரிந்து பரபரப்பு

கரூர்: கரூரில் முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக அமைத்த ஷெட்டின், இரும்பு துாண்கள் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. த.வெ.க., தலைவர் விஜய், முதல்வரான பிறகு முதன் முறையாக நாளை கரூர் வர உள்ளார். கலெக்டர் அலுவலகத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. வெண்ணெய்மலையில் உள்ள, தனியாருக்கு சொந்தமான, 'அட்லஸ்' கலையரங்க வளாகத்தில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதற்காக நேற்று, 5,000 பேர் அமரும் வகையில், கிரேன் உதவியுடன் இரும்பு துாண்களை கொண்டு, ஷெட் அமைக்கும் பணி நடந்தது. அப்போது, ராட்சத கயிறு அறுந்ததால், இரும்பு துாண்கள் சரிந்து தொங்கின. ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொடர்ந்து, ஷெட் அமைக்கும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !