உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமரை கொல்ல திட்டமிட்டவருக்கு சிலையா?

பிரதமரை கொல்ல திட்டமிட்டவருக்கு சிலையா?

திருச்சி, விரகாலுாரைச் சேர்ந்த ஸ்டெனிஸ்லாஸ் லுார்துசாமி எனும் ஸ்டேன்சாமி, பாதிரியாராக இருந்து ஜார்க்கண்டில் ஒரு அமைப்பை நிறுவி வெளிநாட்டு நிதி பெற்றார். புனே அருகேயுள்ள பீமா கரோகானில் பொதுக்கூட்ட கலவரத்தில், ஸ்டேன்சாமி உள்ளிட்ட எட்டு பேர் என்.ஐ.ஏ.,வால் கைது செய்யப்பட்டனர். ஸ்டேன்சாமி சிறையில் இருக்கும்போது கொரோனாவால் மரணம் அடைந்தார்.ஸ்டேன்சாமியின் பூர்வீக கிராமமான விரகாலுாரில், கத்தோலிக்க சர்ச்சில் உருவச்சிலை, நினைவிடம் அமைத்து, 5ம் தேதி திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடியை படுகொலை செய்ய திட்டம் தீட்டியது, அவரது இ-மெயில் வாயிலாக, தேசிய புலனாய்வு முகமை கண்டறிந்தது. பிரதமரை கொல்ல சதி திட்டம் தீட்டியவருக்கு உருவச்சிலை, நினைவிடம் கட்ட தமிழக அரசு அனுமதி அளித்தது, கடும் கண்டனத்துக்கு உரியது; அதற்கு தடை விதிக்க வேண்டும். இல்லை என்றால், எதிராக போராட்டம் நடத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 02, 2025 09:23

பிரதமரை கொல்ல சதி திட்டம் தீட்டியவருக்கு உருவச்சிலை மட்டுமல்ல பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றுகூட கோரிக்கை வைப்பார்கள் ... அந்த பாதிரியாரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நஷ்டா ஈடும் ...அரசு வேலை கொடுப்பார்கள் ..


skrisnagmailcom
ஜூலை 02, 2025 08:11

அட ந்ஙக ஒன்னு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் 36 தமிழர்களை குண்டு வைத்து கொன்ற கூட்டத்தில் இருந்த சிலரை கட்டி பிடத்து வரவேற்ற கூட்டம்தானோ


சமீபத்திய செய்தி